» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி அறவழி உண்ணாநிலை போராட்டம்
சனி 21, பிப்ரவரி 2026 3:19:10 PM (IST)

மது ஒழிப்பு போராளி சசி பெருமாளின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் நிரந்தர மதுவிலக்கை வலியுறுத்தி சென்னையில் அறவழி உண்ணாநிலை கூடுகை நடைபெற்றது.
சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் பிப்ரவரி 20 அன்று நடைபெற்ற இந்த போராட்டத்தை வீ. சுந்தர் ஒருங்கிணைத்தார். உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் போராட்டத்தைத் துவக்கி வைத்து, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றினார்.
பங்கேற்ற முக்கிய நபர்கள்
இந்த அறவழிப் போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் அருள், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி, தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் அமைப்பு தலைவர் சேம. நாராயணன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் முத்தமிழ் மணி, காந்திய சமதர்ம இயக்கத் தலைவர் சிவஞான சம்பந்தம், தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம். எல். இரவி, மற்றும் பெண்ணுரிமை இயக்கத் தலைவர்கள் லீலாவதி, கமலா ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், தமிழ்த் தேசியப் பேரியக்க துணைத் தலைவர் அருணபாரதி, அகில இந்திய தொழிற்சங்க கவுன்சில் பிரதிநிதி ஏ. எஸ். குமார், ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகி பாலகிருஷ்ணன், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக்கான கூட்டியக்கத் தலைவர் மேரி லில்லி, தமிழர் தேசிய முன்னணி சென்னை மாவட்டத் தலைவர் இலாரன்சு, மக்களுக்குக்கான மக்கள் இயக்க பொதுச்செயலாளர் கார்த்திக் கண்ணன், தமிழ்த் தேசியாளர் புலவர் இரத்தினவேல், இயற்கை விவசாயி சிவக்குமார், எழுத்தாளர் உமா சுப்பரமணியன் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிதம்பரம், வர்ஷா, சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்தினர்.

மதுபோதை ஒழிப்பு செயற்பாட்டாளர்கள் விசிறி சுவாமி முருகன், தனசேகர், மருதூர் பெரியசாமி, இரவிச்சந்திரன், செல்லப்பாண்டியன், நெற்றிக்கண் கிருஷ்ணமூர்த்தி, வைரவேல் ஆகியோரும் இதில் திரளாகப் பங்கேற்றனர். மாலை நடைபெற்ற நிறைவு விழாவில், அமைப்புச்சாரா தொழிலாளர்கள் தேசிய கூட்டமைப்பு தலைவர் கீதா மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் ஆகியோர் கலந்துகொண்டு, உண்ணாநிலை இருந்தவர்களுக்கு பழரசம் வழங்கி போராட்டத்தை நிறைவு செய்து வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!
சனி 21, பிப்ரவரி 2026 4:57:11 PM (IST)

மதுரையில் ரூ.213 கோடி செலவில் புதிய மேம்பாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சனி 21, பிப்ரவரி 2026 4:29:11 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன பூங்கா அமைய ஆய்வு: கவுன்சிலர் கோரிக்கை ஏற்பு
சனி 21, பிப்ரவரி 2026 3:16:23 PM (IST)

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடக்கம்!
சனி 21, பிப்ரவரி 2026 10:29:53 AM (IST)

ஏப்ரலில் தேர்தல்? பிப். 25 முதல் 27 வரை தேர்தல் ஆணையக் குழு புதுச்சேரி, தமிழகத்தில் ஆய்வு
சனி 21, பிப்ரவரி 2026 10:20:59 AM (IST)

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

