» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:53:08 PM (IST)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பு தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து மௌனம் காத்து வந்தது. இதற்கிடையே, அவரது முக்கிய ஆதரவாளர்களான வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தை அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மட்டும் கூட்டத்தில் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கூட்டத்தொடருக்குப் பிறகு, சட்டப்பேரவை வளாகத்திலேயே முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத் உடனிருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் இணைந்த நிலையில், ஓபிஎஸ்ஸின் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
"யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்பேன்" என்று ஓபிஎஸ் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இந்தச் சந்திப்பு அது தொடர்பானதாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடியும்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:51:36 PM (IST)

மீண்டும் வருவோம்; சாதனைகளை மிஞ்சுவோம்: பேரவையில் முதல்வர் நெகிழ்ச்சி உரை!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:27:37 PM (IST)

தி.மு.க. நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழல்: விஜய் கண்டனம்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:22:06 PM (IST)

டி20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே அதிரடி வெற்றி - புள்ளிப்பட்டியலில் முதலிடம்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 11:19:20 AM (IST)

முதல்வர் ஸ்டாலின் வெற்றிக்கு எதிரான மேல்முறையீடு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு
வெள்ளி 20, பிப்ரவரி 2026 11:09:46 AM (IST)


ஓட்டு போட்ட முட்டாள்Feb 20, 2026 - 06:19:40 PM | Posted IP 104.2*****