» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் : அரசுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
வெள்ளி 28, நவம்பர் 2025 12:16:08 PM (IST)
தமிழக மக்களுக்கும் பொங்கல் பரிசாக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: நான் யாரையும் சந்திப்பதற்காக டெல்லி செல்லவில்லை. அது என்னுடைய சொந்தப் பயணம். முந்தா நாள் மதியம் சென்றுவிட்டு நேற்று காலையில் திரும்பிவிட்டேன். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பதால் அதிமுக - பாஜக கூட்டணிக்கு எந்தப் பின்னடைவும் இல்லை.செங்கோட்டையன் 1977 முதல், 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் மூத்த தலைவர். எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அமைச்சரவையில் பணியாற்றியவர். அதிமுக-வை பொறுத்தவரை அதற்கென தனி வாக்கு வங்கி உள்ளது. ஒரு தலைவர் விலகிச் செல்வதால் அந்த வாக்கு வங்கி அப்படியே அவருடன் செல்லுமா என்பது கேள்விக்குறிதான். தேர்தலுக்குப் பின்னரே அதன் தாக்கம் தெரியும்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 2026-ல் கூட்டணி ஆட்சி அமையும் எனக் கூறி உள்ளார். கருத்துச் சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், எஜமானர்களான வாக்காளர்களே அதை முடிவு செய்வார்கள். 2006-ல் திமுக மைனாரிட்டி அரசை அமைத்ததைத் தவிர, தமிழக வரலாற்றில் தனிப்பெரும்பான்மை கொண்ட ஆட்சியைத்தான் மக்கள் தேர்வு செய்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சொத்துவரி மற்றும் மின்கட்டணத்தை 300 சதவீதம் உயர்த்தியுள்ளது. சொன்ன வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ஆனால், பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், கடந்த முறை ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இந்த முறை மக்கள் ரூ.5 ஆயிரம் எதிர்பார்க்கிறார்கள்.
முதலமைச்சர் என் தொகுதிக்கு பாலம், ரோடு, கல்லூரி என நிறைய நன்மைகளைச் செய்துள்ளார். அதேபோல் மக்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்க வேண்டும் என்று நானும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் இந்த அரசால் லட்ச ரூபாய் வரைக்கும் நஷ்டத்தில் இருக்கையில், வெறும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஓட்டுப் போடுவார்களா என்பது சந்தேகமே.
உலகின் மிகப்பெரிய கட்சி: பாஜக சுமார் 1,600-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள், 300-க்கும் மேற்பட்ட எம்பி-க்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய கட்சி. தம்பி விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் இன்னும் ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை. அப்படிப்பட்டவர், எடுத்தவுடனேயே லாங் ஜம்ப் செய்து உலகத்தையே தாண்டுவேன் என்று சொல்வது சரியாக இருக்காது. தேர்தலில் நின்று தன் பலத்தை நிரூபித்த பிறகு பேசலாம். எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்கும் முன்பே எம்எல்ஏ-வாகவும், திமுக-வின் முகமாகவும் இருந்தார். ஆனால் விஜய் இப்போது நடிகராக மட்டுமே உள்ளார்.
பாஜகவுக்கே வந்திருக்கலாமே.. அதிமுக-வில் இருந்துகொண்டு பாஜக-வை நம்பினோம் என்று செங்கோட்டையன் சொல்வது எப்படிப் பொருத்தமாக இருக்கும்? செங்கோட்டையன் தவெக-வில் இணைந்ததன் பின்னணியில் பாஜக இருப்பதாகத் திருமாவளவன் சொல்வது தவறானது. பாஜக பின்னணியில் இருந்தால் அவர் ஏன் தவெக-வுக்குச் செல்ல வேண்டும்; பாஜக-வுக்கே வந்திருக்கலாமே.
பழனிசாமியின் போக்கு காரணமாகவே நிர்வாகிகள் வெளியேறு கிறார்களா என்று கேட்கிறீர்கள். அடுத்த கட்சிகளின் உள்கட்சி விவகாரங்கள் குறித்து பேசுவது நாகரிகமாக இருக்காது. டிடிவி. தினகரன் கூறியது போல் மூன்றாவது அணி அமைந்தாலும், நான்காவது அணி அமைந்தாலும், 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டியூட் படத்தில் கருத்த மச்சான் பாடலை நீக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 28, நவம்பர் 2025 12:26:08 PM (IST)

செங்கோட்டையன் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை: எடப்பாடி பழனிசாமி காட்டம்!
வெள்ளி 28, நவம்பர் 2025 11:46:46 AM (IST)

அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்: முதல்வர் உத்தரவு
வெள்ளி 28, நவம்பர் 2025 11:33:51 AM (IST)

கருமேனியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் சபாநாயகர் மு.அப்பாவு..!
வெள்ளி 28, நவம்பர் 2025 11:28:14 AM (IST)

வட தமிழகம் நோக்கி நகரும் டித்வா புயல்: 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
வெள்ளி 28, நவம்பர் 2025 10:43:53 AM (IST)

நடுக்கடலில் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் காயம் - தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 28, நவம்பர் 2025 10:31:29 AM (IST)


.gif)