» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செங்கோட்டையன் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை: எடப்பாடி பழனிசாமி காட்டம்!

வெள்ளி 28, நவம்பர் 2025 11:46:46 AM (IST)



செங்​கோட்​டையன்  அதி​முக​வில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர் என்​ப​தால் அவரைப் பற்றி கருத்து சொல்​வதற்கு ஒன்​றுமில்​லை" என்று அதி​முக பொதுச்​செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி செய்​தி​யாளர்​கள் கேள்விக்கு பதில் அளித்​தார்.

அதி​முக​வில் இருந்து நீக்​கப்​பட்ட முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் நேற்று விஜய் முன்​னிலை​யில், தவெக​வில் இணைந்​தார். இந்​நிலை​யில் அதி​முக​வில் சமீபத்​தில் இணைந்த ராம​நாத​புரம் சமஸ்​தான இளைய மன்​னர் நாகேந்​திர சேதுபதி திருமண விழா மதுரை​யில் நடந்​தது. இந்த திருமண நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க அதி​முக பொதுச்​செய​லா​ளர் கே.பழனி​சாமி நேற்று மதுரை வந்​தார்.

செங்​கோட்​டையன் தவெக​வில் இணைந்​தநிலை​யில் பழனி​சாமி மதுரை வந்​த​தால், அவரை பார்க்க ஏராள​மான அதி​முக தொண்​டர்​கள் திரண்​டனர். மதுரை மாவட்ட முன்​னாள் அமைச்​சர்​கள் செல்​லூர் கே.​ராஜூ, ஆர்​பி.உதயகு​மார், அமைப்பு செய​லா​ளர் விவி.​ராஜன் செல்​லப்பா ஆகியோர் தலை​மை​யில் கட்​சி​யினர் பிரம்​மாண்ட வரவேற்பு அளித்​தனர்.

திருமண விழாவுக்கு வந்த பழனி​சாமி​யிடம் செய்​தி​யாளர்​கள், செங்​கோட்​டையன் தவெக​வில் இணைந்​தது பற்றி கேள்வி எழுப்​பினர். அதற்கு அவர், "என்​னிடம் ஏன் கேட்​கிறீர்​கள். அதை அவரிடமே கேளுங்​கள். அவர் எந்​தக் கட்​சி​யில் சேர்ந்​தால் எங்களுக்கு என்ன? அவர் அதி​முக​வில் இல்​லை. அதனால், அதற்கு பதில் சொல்ல அவசி​யமில்​லை” என்று காட்​ட​மாக பதில் கூறி​னார்.

தொடர்ந்து செய்​தி​யாளர்​கள், ‘நான் என்று ஒரு​வன் நினைத்​தால் ஆண்​ட​வன், தான் என்று தண்​டித்து விடு​வார், இறைவன் கண்​காணித்து கொண்​டிருக்​கிறார்’ என்று மறை​முக​மாக உங்​களை செங்​கோட்​டையன் குற்​றம் சொல்​லி​யிருக்​கிறா​ரா?’ என்று கேட்​டனர். அதற்​கு, அவர், "ஒரு​வர் கருத்​தில் மற்​றொரு​வர் தலை​யிட முடி​யாது. மேலும், ஒவ்​வொரு​வருக்​கும் ஒரு கருத்து உள்​ளது. அவர் அதி​முக​வில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர் என்​ப​தால் அவரைப் பற்றி கருத்து சொல்​வதற்கு ஒன்​றுமில்​லை, ” என்​று கூறி சென்​றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory