» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடுக்கடலில் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் காயம் - தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 28, நவம்பர் 2025 10:31:29 AM (IST)
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் ஒருவர் காயம் அடைந்தார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால் கடலில் சுறாவளிக் காற்று வீசி வருகிறது இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஐந்து நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
இந்த நிலையில் தருவைகுளம் கடற்கரையில் இருந்து மீன் தடை உத்தரவு மீறி ஒரு விசைப் படகில் 10 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் கூத்தக்குழி கடற்கரையில் இருந்து நான்கு கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு பைபர் படகில் வந்த 4பேர் கொண்ட கும்பல் விசைப்படகு மீனவர்கள் மீது திடீரென ஆயுதங்களால் தாக்கினார்களாம்.
இதை எதிர்பாராத மீனவர்கள் சுதாரிப்பதற்குள் பைபர் படகில்வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக விசைப்படகு மீது வீசினார்களாம். இதில் விசைப்படையில் இருந்த தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த அத்தியப்பன் மகன் பெரிய ராஜா (17) என்பவர் தீக்காயம் அடைந்தார். பின்னர் அந்த கும்பல் கடலில் வேகமாக சென்றுவிட்டனர்.
உடனடியாக காயமடைந்த மீனவரை சக மீனவர்கள் மீட்டு திருச்செந்தூர் கடற்கரைக்கு கொண்டு வந்து, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கூடங்குளம் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடி - திருச்செந்தூர் பகுதி மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டியூட் படத்தில் கருத்த மச்சான் பாடலை நீக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 28, நவம்பர் 2025 12:26:08 PM (IST)

பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் : அரசுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
வெள்ளி 28, நவம்பர் 2025 12:16:08 PM (IST)

செங்கோட்டையன் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை: எடப்பாடி பழனிசாமி காட்டம்!
வெள்ளி 28, நவம்பர் 2025 11:46:46 AM (IST)

அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்: முதல்வர் உத்தரவு
வெள்ளி 28, நவம்பர் 2025 11:33:51 AM (IST)

கருமேனியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் சபாநாயகர் மு.அப்பாவு..!
வெள்ளி 28, நவம்பர் 2025 11:28:14 AM (IST)

வட தமிழகம் நோக்கி நகரும் டித்வா புயல்: 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
வெள்ளி 28, நவம்பர் 2025 10:43:53 AM (IST)


.gif)