» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வட தமிழகம் நோக்கி நகரும் டித்வா புயல்: 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
வெள்ளி 28, நவம்பர் 2025 10:43:53 AM (IST)
இலங்கை பகுதிகளில் உருவான டித்வா புயல் வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
புயல் காரணமாக, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 28) அதி பலத்த மழைக்கான "சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை - இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, வியாழக்கிழமை (நவ. 27) அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் வியாழக்கிழமை முற்பகல் டித்வா புயலாக வலுப்பெற்றது.
இதைத் தொடர்ந்து, வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், வடதமிழகம் புதுவை மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரத் தொடங்கியது. இதனால், தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (நவ.28) முதல் டிச. 3- ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் டித்வா புயல், தற்போது புதுவையிலிருந்து தெற்கு - தென்கிழக்கே 440 கி.மீ.தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு- தென்கிழக்கே 540 கி.மீ. தொலைவிலும் நகர்ந்து வருகிறது.
இது ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) அதிகாலை வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதையொட்டிய தெற்கு ஆந்திரம் கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டியூட் படத்தில் கருத்த மச்சான் பாடலை நீக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 28, நவம்பர் 2025 12:26:08 PM (IST)

பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் : அரசுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
வெள்ளி 28, நவம்பர் 2025 12:16:08 PM (IST)

செங்கோட்டையன் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை: எடப்பாடி பழனிசாமி காட்டம்!
வெள்ளி 28, நவம்பர் 2025 11:46:46 AM (IST)

அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்: முதல்வர் உத்தரவு
வெள்ளி 28, நவம்பர் 2025 11:33:51 AM (IST)

கருமேனியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் சபாநாயகர் மு.அப்பாவு..!
வெள்ளி 28, நவம்பர் 2025 11:28:14 AM (IST)

நடுக்கடலில் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் காயம் - தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 28, நவம்பர் 2025 10:31:29 AM (IST)


.gif)