» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அனல்மின்நிலைய ஒப்பந்தத்தில் ஆளுங்கட்சியினர் தலையீடு : முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
திங்கள் 8, செப்டம்பர் 2025 12:46:45 PM (IST)

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் சிறு, குறு ஒப்பந்த காரர்களை மிரட்டும் ஆளுங்கட்சியினரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நான்காண்டு திமுக அராஜக ஆட்சியில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் நிர்வாகம் முற்றிலும் செயலிழந்து விட்டது. அதிகாரிகள் மத்தியில் ஊழல் தலை விரித்தாடுகிறது. நான்கு நாட்களுக்கு முன்பு அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் அண்ணா நகரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை குறைந்த விலையில் டெண்டர் கோரியது தொடர்பாக உயரதிகாரிகள் துணையுடன் திமுக நிர்வாகிகள் அந்த ஒப்பந்ததாரரின் வீட்டுக்குள் புகுந்து கொலை வெறி தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.
இதுகுறித்து ஒப்பந்ததாரர் காவல் துறையில் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. திராவிட மாடல் திமுக ஆட்சியில் காவலர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. தூத்துக்குடி அனல் நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பழுதடைந்த இரண்டு அலகுகளையும் மறு கட்டமைப்பு செய்ய சுமார் 275 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் திமுகவின் முக்கிய புள்ளிகளின் பினாமிக்களின் அராஜகம் அனல் மின் நிலையத்தையும் அதன் நிர்வாகத்தையும் முடக்கி அரசுக்கு பல கோடி இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி உட்பட பல்வேறு துறைகளில் நிர்வாக சீர்கேடும் ஊழலும் அராஜகமும் தலை விரித்து ஆடுகிறது. நேர்மையான ஒப்பந்ததாரர்கள் திமுகவினரால் தாக்கப்பட்டு கொலை மிரட்டலுக்கு ஆளாகிறார்கள். ஆளும் திமுகவின் அராஜகத்தை கண்டித்தும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அனுமதி பெற்று விரைவில் மிகப்பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.
பேட்டியின் போது, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், வடக்கு மாவட்ட ஜெ.பேரவை துணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் அகஸ்டின், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கித் தலைவர் சிவசுப்பிரமணியன், நிர்வாகிகள் அசன், சங்கர், பேச்சியப்பன், ராஜேந்திரன், கனி, ஐயப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மக்களேSep 8, 2025 - 03:52:41 PM | Posted IP 104.2*****
லட்சகணக்கான சம்பளம் வாங்கும் அதிகாரிகளும் ஆளும்கட்சியினர் சேர்ந்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது கண்டிக்கதக்கது
kannanSep 8, 2025 - 03:21:26 PM | Posted IP 172.7*****
திமுக ஆட்சி விரைவில் ஒழியும் காலம் நெருங்கிவிட்டது
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய் உட்பட 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 9:08:01 PM (IST)

இளையராஜாவுக்கு 13ம் தேதி பாராட்டு விழா : தமிழக அரசு அறிவிப்பு
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 5:36:11 PM (IST)

தோல்வி பயத்தால் தவெக நிர்வாகிகள் மீது வழக்கு : திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 5:11:10 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் மீது ஸ்பிரே அடித்த சிறுவன்: போலீசார் விசாரணை
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 4:33:07 PM (IST)

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 3:45:03 PM (IST)

தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் : பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவகத்தில் மனு!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 3:37:59 PM (IST)

ராஜாராம்Sep 8, 2025 - 04:39:41 PM | Posted IP 104.2*****