» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 3:45:03 PM (IST)
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றி பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடுவிதித்தார். இதையடுத்து அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
இதையடுத்து, செங்கோட்டையன் நேற்று டெல்லி சென்றார். கோவிலுக்கு செல்வதாகவும், மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்வதாகவும் செய்தியாளர்களிடம் கூறிய செங்கோட்டையன் டெல்லி சென்றார். டெல்லியில் பாஜக மூத்த தலைவர், உள்துறை மந்திரி அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தார்.
இந்நிலையில், டெல்லியில் இருந்து செங்கோட்டையன் இன்று தமிழகம் திரும்பினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறுகையில், ஹரித்வார் செல்வதாக கூறினேன். அமித்ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினேன். அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று பேசினேன். இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றிய கருத்துகள் அங்கு பரிமாறப்பட்டன. அதிமுக இயக்கம் வலுப்பெற வேண்டுமென கருத்துகளை முன்வைத்தேன். மக்கள் பணி, இயக்கம் வலிமைபெறவும் பணிகளை தொடர்ந்து ஆற்றுவேன் இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய் உட்பட 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 9:08:01 PM (IST)

இளையராஜாவுக்கு 13ம் தேதி பாராட்டு விழா : தமிழக அரசு அறிவிப்பு
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 5:36:11 PM (IST)

தோல்வி பயத்தால் தவெக நிர்வாகிகள் மீது வழக்கு : திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 5:11:10 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் மீது ஸ்பிரே அடித்த சிறுவன்: போலீசார் விசாரணை
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 4:33:07 PM (IST)

தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் : பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவகத்தில் மனு!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 3:37:59 PM (IST)

நீதிமன்ற வளாகத்தில் டிஎஸ்பி சீருடையில் கைது.. தப்பி ஓடியதாக பரவிய தகவல்..!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 12:34:22 PM (IST)
