» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் : பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவகத்தில் மனு!

செவ்வாய் 9, செப்டம்பர் 2025 3:37:59 PM (IST)



தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி டிஜிபி அலுவகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய், 13-ந்தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார். இதற்கான அனுமதி கோரி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விண்ணப்பித்திருந்தார். ஆனால், விஜயின் சுற்றுப்பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து விஜயின் சுற்றுப்பயணத்துக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி டிஜிபி அலுவகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் விஜயின் சுற்றுப்பயண விபரம் வெளியாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

13-09-2025 சனிக்கிழமை திருச்சி, பெரம்பலூர், அரியலூர்

20-09-2025 சனிக்கிழமை நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை

27-09-2025 சனிக்கிழமை திருவள்ளூர், வட சென்னை

04-10-2025 சனிக்கிழமை கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு

05-10-2025 ஞாயிற்றுக்கிழமை கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு

11-10-2025 சனிக்கிழமை குமரி, நெல்லை, தூத்துக்குடி

18-10-2025 சனிக்கிழமை காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை

25-10-2025 சனிக்கிழமை தென் சென்னை, செங்கல்பட்டு

01-11-2025 சனிக்கிழமை கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்

08-11-2025 சனிக்கிழமை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்

15-11-2025 சனிக்கிழமை தென்காசி, விருதுநகர்

22-11-2025 சனிக்கிழமை கடலுர்

29-11-2025 சனிக்கிழமை சிவகங்கை, ராமநாதபுரம்

06-12-2025 சனிக்கிழமை தஞ்சாவூர், புதுக்கோட்டை

13-12-2025 சனிக்கிழமை சேலம், நாமக்கல், கரூர்

20-12-2025 சனிக்கிழமை திண்டுக்கல், தேனி, மதுரை


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory