» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் மீது ஸ்பிரே அடித்த சிறுவன்: போலீசார் விசாரணை

செவ்வாய் 9, செப்டம்பர் 2025 4:33:07 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் மீது ஸ்பிரே அடித்த சிறுவன் மற்றும் அவரது தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று இரவு 8 மணி அளவில் சிறுவன் ஒருவன் தான் கையில் வைத்திருந்த 'சில்லி ஸ்பிரே'யை அருகில் இருந்தவர்கள் முகத்தில் அடித்துள்ளான். இதனால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

உடனே அவர்கள் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கோவில் பணியாளர்கள் அந்த சிறுவனை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் போது சிறுவன் தனது சொந்த ஊர் திருப்பூர் எனவும், தனது உறவினர்களுடன் கோவிலுக்கு வந்ததாக கூறியுள்ளான். அப்போது அவனுடன் இருந்த மற்ற சிறுவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவலை கூறினர்.

உடனே கோவில் நிர்வாகம் கோவில் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவர்கள் தாங்கள் பயன்படுத்திய 'சில்லி ஸ்பிரே' அங்கு நின்ற ஒரு காருக்கு அடியில் இருந்து எடுத்ததாக கூறியுள்ளனர். அதில் ஒரு சிறுவனின் தாய் கோவிலில் பக்தர்களிடம் யாசகம் பெற்று வருகிறார் என்பதும் தெரியவந்தது.

சிறுவனின் தாயாரையும் போலீசார் விசாரணை செய்ததிலும் முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறியுள்ளார். உடனே போலீசார் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

காருக்கு அடியில் கிடந்து எடுத்ததாக கூறிய அந்த 'சில்லி ஸ்பிரே' கோவிலுக்கு வரும் பக்தர்களை ஏமாற்றி நகை, பணத்தை பறிப்பதற்காக யாரேனும் மர்மநபர்கள் கொண்டு வந்தார்களா? அல்லது பெண்கள் தற்காப்புக்காக கொண்டு வந்ததை யாரேனும் விட்டுச் சென்றார்களா? அது சிறுவனின் கைக்கு வந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory