» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்லிடைக்குறிச்சியில் அரபி மதரஸா ஆண்டு விழா

சனி 6, செப்டம்பர் 2025 4:47:49 PM (IST)



கல்லிடைக்குறிச்சியில் நூருல்ஹிதாயா அரபி மதரஸாவின் 36ஆவது ஆண்டு விழா உட்பட முப்பெரும் விழா நடைபெற்றது. 

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் நபிகள் (ஸல்) நாயகம் பிறந்ததின விழா, நூருல்ஹிதாயா அரபி மதரஸாவின் 36ஆவது ஆண்டு விழா, ரஹ்மத்துல்லாஹ் அப்பா கந்தூரி விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அ. நாகூர்கனி தலைமை வகித்தார். 

துணைத் தலைவர் அ. நாகூர்மீரான், தணிக்கையாளர் முகம்மது உசேன், பொருளாளர் என். அஜிஸ், நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முகைதீன் பள்ளிவாசல் இமாம் பி. முஹம்மது இத்ரீஸ் கிராஅத் ஓதினார். சிறப்பு விருந்தினர்களாக களக்காடு மருத்துவர் பி. ஆதம்ஷேக்அலி, வழக்குரைஞர் எம். பாதுஷா ஆகியோர் கலந்துகொண்டு மதரஸா மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் மதரஸா மாணவர், மாணவிகளின் சொற்பொழிவு, குறுநாடகம், உரையாடல் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக மதரஸா மாணவர், மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் வடக்குத் தைக்கால் தெருவில் மதரஸாவில் இருந்து புறப்பட்டு விழா நடைபெறும் தெற்கு தைக்கால் தெருவில் முடிவடைந்தது. இதில், ஜமாத் தலைவர், நிர்வாகிகள், ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், தொடர்ந்து மதரஸா மாணவர்கள் பங்கேற்ற உயர்ந்த வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது கல்வியா, செல்வமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. 

நடுவராக நூருல்ஹிதாயா அரபி மதரஸா முதல்வர் மு. ரஹ்மத் ரபீக் இருந்தார். கல்வியே என்ற தலைப்பில் மாணவிகள் ரெஸ்பின் பாத்திமா, நபிலா, செல்வமே என்ற தலைப்பில் மாணவர்கள் அஸ்லம் அஹமத், அஷ்வாக் அஹ்மத் ஆகியோர் பேசினர். ரஹ்மத் பள்ளிவாசல் தலைமை இமாம் எஸ். முகம்மது முஹம்மில் வரவேற்றார். நிகழ்ச்சியை துணை இமாம் அ. தாஜூதீன் தொகுத்து வழங்கினார். ஜமாத் செயலர் அ. ஷேக் செய்யது அலி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory