» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூரில் கடல் 80 அடி தூரம் உள்வாங்கியது
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 9:09:58 AM (IST)
பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூரில் கடல்நீர் 80 அடி தூரம் உள்வாங்கியது. பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடினர்.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் அடிக்கடி கடல்நீர் உள்வாங்குவது வழக்கம்.
அதாவது, ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள், அதற்கு முன்தினம், மறுநாள் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழுவதும் பவுர்ணமி இருக்கிறது. இதை முன்னிட்டு நேற்று காலையில் திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடல் நீரானது சுமார் 80 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்பட்டது. இது இரவு வரை நீடித்தது.
இதனால் கடலில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. கடல் உள்வாங்கினாலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பாசி படர்ந்த பாறைகள் மீது ஏறி நின்று ‘செல்பி’ எடுத்தும் மகிழ்ந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 8, செப்டம்பர் 2025 8:44:12 PM (IST)

கூட்டணிக்குள் நடைபெறும் நிகழ்வுகள் மன வருத்தம் அளிக்கிறது : நயினார் நாகேந்திரன் பேட்டி
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:51:42 PM (IST)

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம்: அன்புமணி வலியுறுத்தல்
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:28:28 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:19:09 PM (IST)

கோவில்பட்டி மேற்கு நிலையத்திற்கு முதல்வர் விருது : தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!
திங்கள் 8, செப்டம்பர் 2025 4:40:33 PM (IST)

அனல்மின்நிலைய ஒப்பந்தத்தில் ஆளுங்கட்சியினர் தலையீடு : முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
திங்கள் 8, செப்டம்பர் 2025 12:46:45 PM (IST)
