» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செங்கோட்டையனை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம்: ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
சனி 6, செப்டம்பர் 2025 5:56:51 PM (IST)
செங்கோட்டையனை அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிய பழனிசாமியின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக 2, 3 அணிகளாக பிரிந்ததில் இருந்து தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தோல்வியில் இருந்து விடுபட வேண்டுமென்றால் அதிமுக இணைய வேண்டும் என்பது தொண்டர்கள், பொதுமக்களின் மனநிலையாக உள்ளது.
செங்கோட்டையனை அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிய பழனிசாமியின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம்.அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி நடந்தவர்கள் மீதுதான் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கூறியவர்கள் மீது ஜெயலலிதா, எம்ஜிஆர் ஒருபோதும் நடவடிக்கை எடுத்ததில்லை. செங்கோட்டையனின் விடாமுயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 8, செப்டம்பர் 2025 8:44:12 PM (IST)

கூட்டணிக்குள் நடைபெறும் நிகழ்வுகள் மன வருத்தம் அளிக்கிறது : நயினார் நாகேந்திரன் பேட்டி
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:51:42 PM (IST)

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம்: அன்புமணி வலியுறுத்தல்
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:28:28 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:19:09 PM (IST)

கோவில்பட்டி மேற்கு நிலையத்திற்கு முதல்வர் விருது : தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!
திங்கள் 8, செப்டம்பர் 2025 4:40:33 PM (IST)

அனல்மின்நிலைய ஒப்பந்தத்தில் ஆளுங்கட்சியினர் தலையீடு : முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
திங்கள் 8, செப்டம்பர் 2025 12:46:45 PM (IST)

எம்ஜிஆர்Sep 7, 2025 - 10:27:46 AM | Posted IP 172.7*****