» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்: மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா புகார்!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 12:19:36 PM (IST)

நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார் என்று ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "மாதம்பட்டி ரங்கராஜ் எனது கணவர், நான் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அவர்தான் அப்பா, அவருடன் கடைசியாக பேச முயற்சித்தபோது தன்னை தாக்கினார் என்று ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் என்னுடன் தொடர்பில் இல்லை. எனக்கும், எனது குழந்தைக்காகவும் நான் இப்போது போராடிக் கொண்டிருக்கிறேன். இதுகுறித்து நான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார். என் வயித்துல இருக்கிற குழந்தைக்கு அவர் தான் அப்பா. அதனால் அவர் இந்த குழந்தைக்கு பதில் சொல்லி ஆக வேண்டும்.
முறைப்படி என்னை திருமணம் செய்து கொண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அப்பார்ட்மென்டில் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது அனைவருக்கும் தெரியும். இருவரும் ஜூடிசியல் செப்பரேஷனில் இருப்பதாக கூறினார். அதனை நம்பி தான் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்தேன். ஒன்றரை மாதமாக அவருடன் எந்தவொரு தொடர்பிலும் நான் இல்லை. கோவிலில் எங்களுடைய திருமணத்தை பதிவு செய்துள்ளோம்.
மாதம்பட்டி ரங்கராஜை தொடர்பு கொள்ள பல்வேறு வழிகளில் முயற்சி செய்தேன். ஆனால், அவரிடம் என்னை பேச விடாமல் தடுக்கின்றனர். பேச விடாமல் தடுப்பது அவருடைய நண்பர்கள், தம்பி, குடும்பத்தினராக இருக்கலாம். நான் மாதம்பட்டி ரங்கராஜுடன் சேர்ந்து வாழ வேண்டும். இந்த குழந்தைக்கு அவர் அப்பா. அதனை மட்டும் தான் நான் புகாராக தெரிவித்துள்ளேன்.
பிரபலங்களின் வீட்டு சமையல் என்றாலே அது மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் என சொல்லும் அளவுக்கு பிரபலமடைந்தவர் ரங்கராஜ். இவர் 2019-ம் ஆண்டு வெளியான 'மெஹந்தி சர்கஸ்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை ராஜு சரவணன் இயக்கியிருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து கேசினோ, மிஸ் மேகி, பெண்குயின் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி பெயர் ஸ்ருதி. முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் எப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற விவாதம் இணையத்தில் வைரலானது.
சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து ஜாய் கிரிஸில்டாவுடன் எடுத்த அனைத்து போட்டோவையும் டெலிட் செய்து விட்டார். இந்நிலையில்தான் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டின் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு: பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:48:44 PM (IST)

தூத்துக்குடியில் 2 வீடுகளில் 31 பவுன் நகை கொள்ளை : போலீசார் விசாரணை!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:22:25 PM (IST)

தூத்துக்குடியில் வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயர்வு: மீனவர்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 9:28:03 AM (IST)

விஜயை நேரில் பார்த்தால் முகத்தில் ஓங்கி குத்துவேன்: நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:28:44 PM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: 5476 நபர்களுக்கு உடல் பரிசோதனை!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:13:39 PM (IST)

ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்க புதிய கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:00:42 PM (IST)
