» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயர்வு: மீனவர்கள் மகிழ்ச்சி

ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 9:28:03 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் நேற்று கரைதிரும்பின. மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, மீன்கள் சரிவர கிடைக்காததால் வரத்து குறைந்திருந்தது. இதனால், வழக்கத்தைவிட விலை உயர்ந்து காணப்பட்டது.

விளைமீன், ஊழி, பாறை ஆகியவை கிலோ ரூ. 300 -ரூ. 600 வரை, சாளை மீன் ஒரு கூடை ரூ. 800 முதல் ரூ. 1000 வரை, நண்டு கிலோ ரூ. 550 வரை, தோல்பாறை ரூ. 200 வரை என விற்பனையாகின. ஏற்றுமதி ரக மீன்களான கலவா கிலோ ரூ. 450, பண்டாரி ரூ. 500 - ரூ. 600 வரை, கிளி மீன் ரூ. 900 வரை, தம்பா ரூ. 250 வரை என விற்பனையாகின. வரத்து குறைந்திருந்தாலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory