» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜயை நேரில் பார்த்தால் முகத்தில் ஓங்கி குத்துவேன்: நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு!

சனி 30, ஆகஸ்ட் 2025 5:28:44 PM (IST)

தவெக தலைவர் விஜயை நேரில் பார்த்தால் முகத்தில் ஓங்கி குத்துவேன் என்று இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் பேசினார். 

கோவை துடியலூர் சந்திப்பில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.கவை சேர்ந்த நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நாம் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளோம். பொட்டு வைப்பது, சாமி கும்பிடுவதில் கூட பிரச்னை. 100 முறை என்னை சங்கி என்று அழைக்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. அதை நான் மார் தட்டி ஏற்றுக்கொள்வேன். இங்கு எல்லா கடவுளும் ஒன்றுதான், வழிபடும் விதம் தான் வேறு வேறு.

சமீபத்துல மதுரை மாநாட்டுல தம்பி விஜய், நான் உச்சத்தில் இருக்கும் போது வந்தவன். பிழைப்பு தேடி வரவில்லைனு பேசியிருக்கிறார். அப்படியென்றால் அவர் யாரை பார்த்து அதனை சொல்கிறார். எம்.ஜி.ஆரையா, ஜெயலலிதாவையா? இல்ல அன்பு அண்ணன் விஜயகாந்தையா, இல்ல கமல் ஹாசனையா?.

மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் பிரதமரை பார்த்து சொடக்கு போட்டு பேசுகிறார். இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் விளைவித்தார் பிரதமர் மோடி என்று கூறுகிறார். ஆனால் இதே விஜய், கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி கோவையில் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக பூனை குட்டியை போன்று கையை கட்டி அமர்ந்திருந்தார்.

அப்போது விஜய், பிரதமரை சந்தித்தது எதற்காக, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவா? மீனவர் பிரச்சினை குறித்து பேசவா? அல்லது கல்வியை சமத்துவமாக்க வேண்டும் என்று பேசுவதற்காகவா? அல்லது கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவா? எதுவும் இல்லை தன்னுடைய தலைவா என்ற படம் ஓடுவதற்காக பிரதமரை பார்த்துவிட்டு, இப்போது பிரதமரை பார்த்து கையை சொடக்கு போட்டு பேசுகிறார்.

இப்போ கையை சொடக்கு போட்டு பேசுற விஜய்க்கு பழையது எல்லாம் மறந்துட்டாரு. தம்பிக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் மாறி மறந்துட்டாருனு நினைக்கிறேன். மிஸ்டர், மிஸ்டர்னு சொடக்கு போட்டு சொல்லும்போதெல்லாம், ஒரு வாக்காளனா, ஒரு குடிமகனா எனக்கு அப்பா யாரென்றால் அதுமோடி தான். அவர்தான் என்ன காப்பாத்துறாரு. அமெரிக்காவே வியந்து பார்க்கும் ஒரே பிரதமர் மோடி. அவரை போய் கைநீட்டி சொடக்கு போட்டு பேச அருகதை இல்லை.

முதல்வரை அங்கிள் என்றும், பிரதமரை மிஸ்டர் என்றும் குறிப்பிடுகிறார். இதுதான் அரசியல் நாகரீகமா. நீயே இப்படி இருந்தால், உன்ன நம்பி இருக்க இளைஞர்கள் என்ன ஆவார்கள். எனக்கு வர கோவத்துக்கு ஒங்கி குத்த வேண்டும் என தோன்றுகிறது. அதனை நாம் ஓங்கி ஓட்டாக குத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory