» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: 5476 நபர்களுக்கு உடல் பரிசோதனை!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:13:39 PM (IST)

பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளியில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்” திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வஹாப் பார்வையிட்டு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளியில் இன்று (30.08.2025) நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை” சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வஹாப், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இம்முகாமினை, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் மோனிகா ராணா, துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு திசையன்விளையிலும், சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்திற்கு கல்லிடைக்குறிச்சியிலும், களக்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு களக்காடிலும் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் 5476 நபர்கள் கலந்து கொண்டு உடல்பரிசோதனை செய்து கொண்டனர். அதில், 67 நபர்களுக்கு தீவிர நோய்கள் கண்டறியப்பட்டு உயர்சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இம்முகாமில் அடிப்படை சிகிச்சை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் பரிசோதனைகளும் (உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மின் இதய வரைபடம், எக்கோ, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் முழுமையான இரத்தப்பரிசோதனை, காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறிதல் பரிசோதனைகளும், ஆரம்ப கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் போன்ற அனைத்து பரிசோதனைகளும் கண்டறியப்படும்) மேலும் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, இதயவியல், மகப்பேறு மருத்துவம் எலும்பு மற்றும் நரம்பியல், மனநலம், நுரையீரல், தோல் நோய், காது மூக்கு தொண்டை மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் இயன்முறை சிகிச்சை போன்ற 17 வகையான சிறப்பு மருத்துவம் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளும், சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட பரிசோதனைகள் மட்டுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத்திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் போன்ற சேவைகளும் இம்முகாமில் வழங்கப்படுகிறது. மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரமும் ”சரியாக உண்ணுங்கள்” இயக்கம் மூலம் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்படும்.
இன்று திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளுக்கு தூய யோவான் பள்ளியில் இன்று நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில்” சுமார் 1581 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 15 நபர்களுக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்னும் 26 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. ஒவ்வோரு சனிக்கிழமையும் இந்த முகாமில் 17 சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பல்வேறு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்குவார்கள். பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் இம்முகாமில் கலந்து கொண்டு அனைத்து சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அறிவுரைகள் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மருத்துவ முகாமில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய சந்திரன், மாநகர சுகாதார அலுவலர் மரு.ராணி, வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டின் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு: பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:48:44 PM (IST)

தூத்துக்குடியில் 2 வீடுகளில் 31 பவுன் நகை கொள்ளை : போலீசார் விசாரணை!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:22:25 PM (IST)

தூத்துக்குடியில் வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயர்வு: மீனவர்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 9:28:03 AM (IST)

விஜயை நேரில் பார்த்தால் முகத்தில் ஓங்கி குத்துவேன்: நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:28:44 PM (IST)

ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்க புதிய கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:00:42 PM (IST)

மூப்பனார் பிரதமராவதை தடுத்தது தமிழகத்துக்கு நடந்த துரோகம்: நிர்மலா சீதாராமன் பேச்சு!
சனி 30, ஆகஸ்ட் 2025 4:12:31 PM (IST)
