» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டின் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு: பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்!

ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:48:44 PM (IST)

தமிழகத்தின் காவல் துறை தலைமை இயக்குநராக (பொறுப்பு) ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜி. வெங்கட்ராமன், 1994 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வானவர்.

இளங்கலை பொருளாதாரம், முதுகலை பொது நிர்வாகம் முடித்த இவர், 1996 ஆம் ஆண்டு திருச்செந்தூரில் பணியைத் தொடங்கினார். 1996 -ல் உதவி காவல் கண்காளிப்பாளராக (ஏஎஸ்பி) திருச்செந்தூரில் பணியாற்றினார். 1997-ல் கோவில்பட்டி, ராமநாதபுரம் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.

1998 ஆம் ஆண்டு காவல் கண்காணிப்பாளரனதும் மத்திய அரசின் உளவுப் பிரிவு பணிக்குச் சென்று, தமிழகம் திரும்பினார். 2001 ஆம் ஆண்டு சென்னை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். 2008 ஆம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.

2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் சிபிசிஐடி டிஐஜியாக இருந்தார். 2012-ல் ஐஜியாக பதவி உயர்வு பெற்றார். 2019ஆம் ஆண்டு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று, சைபர் கிரைம், தலைமையகம், நிர்வாகப் பணிகளில் பணியாற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory