» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 11:53:18 AM (IST)
தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கேரள ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவு பெட்டிகளில் இடம் கிடைக்காமல், காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால், முக்கிய ரயில்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், காத்திருப்போர் பட்டியலில் இடம்பிடித்தவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட படுக்கைகள் கிடைக்கும்.
இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் : தாம்பரம் - செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது. அந்த வகையில், தாம்பரத்தில் இருந்து வரும் 29 (நாளை), 30, 31 ஆகிய தேதிகளில் புறப்படும் ரயிலில் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று, 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி 2, தூங்கும் வசதி பெட்டி 3 ஆகியவை கூடுதலாக இணைக்கப்படுகின்றன. இதேபோல், செங்கோட்டையில் இருந்து சென்னை வரும் ரயிலில் 30, 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இதேபோல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
மேலும், தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் (வண்டி எண் 22657/22658), தாம்பரத்தில் இருந்து 29, 30, 31 ஆகிய தேதிகளில் ஒரு 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி, 2 மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டி, 3 தூங்கும் வசதி பெட்டி, ஒரு பொதுப் பெட்டி ஆகியவை இணைக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படும் ரயிலில் 30, 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இதேபோல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
இதேபோல், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் (12695/12696), சென்னை சென்டிரலில் இருந்து 31, செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் கூடுதலாக 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து செப்டம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது. இதேபோல், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் - ஆழப்புலா அதிவிரைவு ரயிலிலும் (22639/22640) இன்று முதல் 3 நாட்கள் கூடுதலாக ஒரு 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது.
அதேபோல், கோவை - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16618/16617) செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 29 வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டின் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு: பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:48:44 PM (IST)

தூத்துக்குடியில் 2 வீடுகளில் 31 பவுன் நகை கொள்ளை : போலீசார் விசாரணை!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:22:25 PM (IST)

தூத்துக்குடியில் வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயர்வு: மீனவர்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 9:28:03 AM (IST)

விஜயை நேரில் பார்த்தால் முகத்தில் ஓங்கி குத்துவேன்: நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:28:44 PM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: 5476 நபர்களுக்கு உடல் பரிசோதனை!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:13:39 PM (IST)

ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்க புதிய கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:00:42 PM (IST)
