» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடலில் தவறி விழுந்து ஷிப்பிங் நிறுவன மேலாளர் சாவு : தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 10:32:54 AM (IST)
தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து ஷிப்பிங் நிறுவன மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்தபர் ராஜையா மகன் சந்தானராஜ் (43), இவருக்கு திலகராணி (30) என்ற மனைவியும், 5 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஷிப்பிங் கம்பெனியின் மரைன் இன்ஜினியரிங் பிரிவில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 7 மணியளவில் பழைய துறைமுகத்தில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது துறைமுகத்தில் நிறுத்தி இருந்த கோமாங்கோ படகில் இருந்து அருகில் நின்றுகொண்டிருந்த புளூஹா கப்பலுக்கு தாவிச் செல்ல முயன்றபோது நிலை தடுமாறி கடலில் விழுந்தார். இதுகுறித்து தகவல்அறிந்து துறைமுக தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று அவரை மீட்டு முதல் உதவி அளித்து பின்னர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தருவைக்குளம் கடல் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப் பதிவு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டின் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு: பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:48:44 PM (IST)

தூத்துக்குடியில் 2 வீடுகளில் 31 பவுன் நகை கொள்ளை : போலீசார் விசாரணை!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:22:25 PM (IST)

தூத்துக்குடியில் வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயர்வு: மீனவர்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 9:28:03 AM (IST)

விஜயை நேரில் பார்த்தால் முகத்தில் ஓங்கி குத்துவேன்: நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:28:44 PM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: 5476 நபர்களுக்கு உடல் பரிசோதனை!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:13:39 PM (IST)

ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்க புதிய கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:00:42 PM (IST)

BarathAug 26, 2025 - 04:18:43 PM | Posted IP 172.7*****