» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை : உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உப்பு வியாபாரிகள் சங்கம் வரவேற்பு
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 5:19:14 PM (IST)

சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் பொன்பாண்டியன், செயலாளர் தேன்ராஜ், பொருளாளர் ரெங்கநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சுமார் ஆண்டுக்கு 20 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு உணவுக்காக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஒழுங்குமுறை ஆணையம் சாதாரண உப்பை விற்கக் கூடாது முழுவதுமாக கட்டாயம் அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தனர்.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டனர் இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஒழுங்குமுறை ஆணைய விதிகளை எதிர்த்து கடந்து 2019 ஆம் ஆண்டு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் தன்பாடு உப்பு ஏற்றுமதி மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் மலைப் பிரதேசங்களில் அயோடின் குறைபாடு உள்ள பகுதிகளில் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவது நல்லதாக இருக்கும் மாறாக மற்ற பகுதிகளில் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவதால் தைராய்டு தொடர்பான நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என தங்கள் கருத்தை எடுத்து வைத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை செய்த நீதி அரசர்கள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 13.8.2025 அன்று ஒரு உணவுப் பொருள் தடை செய்யப்பட வேண்டும் என்றால் அது கலப்படமானதாகவோ அல்லது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்க வேண்டும் சாதாரண உப்பு உற்பத்தி செய்வது உடல்நலத்திற்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாது என்றும் அதில் கலப்படமில்லை உப்பு மூன்று இயற்கையான பொருட்களைக் கொண்டு அதாவது தண்ணீர் காற்று மற்றும் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது சாதாரண உப்பு உருவாக்கப்பட்டு மனித தேவைக்காக சமையல் உபயோத்திற்கு மட்டுமின்றி பல ஆயிரம் ஆண்டுகளாக மருத்துவ தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது அயோடின் குறைபாடு என்பது எந்த நாட்டிலும் பெரும் தொற்று நோயல்ல அது ஒரு கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சத்து குறைபாடாகவே நாட்டில் சில பகுதிகளில் உள்ளது பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் அதிகப்படியான அயோடின் உபயோகிப்பது உயிருக்கு ஆபத்தானது என்றும் அது தொண்டை கேன்சர் மற்றும் அதிகப்படியான தைராய்டு வளர்ச்சிக்கு காரணமாகிவிடும் என்றும் கருத்து தெரிவித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஒழுங்குமுறை ஆணைய விதிகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
தீர்ப்புரை வழங்கிய நீதியரசர்கள் மற்றும் வழக்கறிஞர் ரவி அனந்த பத்மநாபன் ஆகியோருக்கு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்களின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டின் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு: பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:48:44 PM (IST)

தூத்துக்குடியில் 2 வீடுகளில் 31 பவுன் நகை கொள்ளை : போலீசார் விசாரணை!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:22:25 PM (IST)

தூத்துக்குடியில் வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயர்வு: மீனவர்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 9:28:03 AM (IST)

விஜயை நேரில் பார்த்தால் முகத்தில் ஓங்கி குத்துவேன்: நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:28:44 PM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: 5476 நபர்களுக்கு உடல் பரிசோதனை!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:13:39 PM (IST)

ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்க புதிய கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:00:42 PM (IST)
