» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்? - தமிழக அரசு விளக்கம்

திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:25:56 PM (IST)

பள்ளி வளாகத்தை மாணவிகள் சுத்தம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளை கொண்டு பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்படுவதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது சமூக ஆர்வலர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது: இது முற்றிலும் தவறான தகவல். கள்ளக்குறிச்சி மாவட்டம் மூரார்பாது அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழாவில் பொதுமக்களால் பூச்செடிகள் வழங்கப்பட்டன. அவற்றை ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் தூய்மை பணியாளர் உதவியுடன் சுற்றுச்சூழல் மன்ற மாணவியர் நட்டனர். 

இதற்காக ‘தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. இதனை அடையாளம் தெரியாத நபர் வீடியோ எடுத்து மாணவிகள் தூய்மைப்பணி செய்வதாக தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். வதந்திகளை நம்பாதீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory