» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் விரைவில் நலம்பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின் பதிவு
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 4:34:22 PM (IST)
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் (80 வயது) தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலையில் இல.கணேசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மிகுந்த கவலை கொள்கிறேன். அவர் விரைவில் நலம்பெற்று, மீண்டும் நல்ல உடல்நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று விழைகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஆகஸ்ட் 3 வரை காவல்: தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திங்கள் 20, ஜூலை 2026 10:02:16 PM (IST)

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

முதல்வர் விஜய்க்கு மிரட்டல்: திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வன்னி அரசு வலியுறுத்தல்!
திங்கள் 20, ஜூலை 2026 5:55:15 PM (IST)

தவெக அரசின் நிர்வாகத் தோல்வி: மின்கட்டணக் குளறுபடிகளுக்கு பாஜக கண்டனம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:16:12 PM (IST)

தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட கீதா ஜீவன் உள்பட 120 பேர் கைது: போக்குவரத்து ஸ்தம்பிப்பு!
திங்கள் 20, ஜூலை 2026 3:46:14 PM (IST)

தமிழ்நாட்டில் நடப்பது சாத்தானின் ஆட்சியா? - தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 20, ஜூலை 2026 3:36:01 PM (IST)


