» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரகாட்ட நிகழ்ச்சியில் தகராறு - 3பேர் காயம் : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!

செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 12:02:48 PM (IST)

களக்காடு அருகே கரகாட்ட நிகழ்ச்சியில் தகராறு செய்து 3பேரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வலேி மாவட்டம், களக்காடு அருகே உள்ள பத்மநேரி கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஒரு திருவிழாவின்போது, வெளியூரிலிருந்து வந்த நபர் ஒருவர், கரகாட்ட நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது விரும்பத்தகாத செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து உள்ளூர் நபர்கள் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத 2 பேர் பத்மநேரி கிராமத்திற்கு வந்து, திருவிழா முடிந்து ஓய்வில் இருந்த ஊர் நபர்களை தாக்கியுள்ளனர். இதில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரகாட்ட நிகழ்ச்சியின் போது நடந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து

மந்திரமணிAug 8, 2025 - 09:31:29 AM | Posted IP 172.7*****

கரகாட்டம் பாட்டு கச்சேரி போன்ற சாதி மோதலுக்கு காரணமாக இருக்கும் நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory