» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிஎன்பிஎஸ்சி மூலம் 2,250 பணியிடங்கள் தேர்வு : தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்புதல்
செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 11:46:06 AM (IST)
டிஎன்பிஎஸ்சி மூலமாக, 400 உதவி பொறியாளர்கள், 1,850 கள உதவியாளர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
மின் வாரியத்தில் உதவி பொறியாளர், கள உதவியாளர், கேங்மேன், லைன்மேன் போன்ற பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. மின் வாரிய பணியாளர்கள் வாரியத்தின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் உதவிப் பொறியாளர் உட்பட ஒரு சில பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற 258 உதவி பொறியாளர்கள் விரைவில் பணியில் சேர்க்கப்பட உள்ளனர்.
இந்நிலையில். தற்போது 400 உதவி பொறியாளர்கள் மற்றும் 1850 கள உதவியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்ய மின் வாரியம் ஒப்புதல் ஒப்புதல் வழங்கியுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுகள் மூலமாக இந்த பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டின் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு: பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:48:44 PM (IST)

தூத்துக்குடியில் 2 வீடுகளில் 31 பவுன் நகை கொள்ளை : போலீசார் விசாரணை!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:22:25 PM (IST)

தூத்துக்குடியில் வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயர்வு: மீனவர்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 9:28:03 AM (IST)

விஜயை நேரில் பார்த்தால் முகத்தில் ஓங்கி குத்துவேன்: நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:28:44 PM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: 5476 நபர்களுக்கு உடல் பரிசோதனை!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:13:39 PM (IST)

ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்க புதிய கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:00:42 PM (IST)
