» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார் என்பது 2 நாளில் அம்பலமாகும்: ராமதாஸ் பேட்டி!
வெள்ளி 18, ஜூலை 2025 5:20:08 PM (IST)
தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார் என இரு தினங்களுக்குள் அம்பலத்திற்கு வரும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
தைலாபுரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் நீர்வளத்துறை வசம் உள்ள 90 அணைகள், போதிய பராமிப்பின்றி உள்ளதால், மழைப்பொழிவின் போது ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஷட்டர்கள், பாசன கட்டமைப்புகளை சீரமைக்க, நீர்வளத் துறைக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.அரசு சார்பில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்துவது நல்ல விஷயம்; ஆனால், 6 மாதத்திற்கு முன் நடத்திஇருக்கலாம். இதேபோல 'அதிகாரிகளுடன் நாங்கள்' என்ற முகாமை, அரசு நடத்த வேண்டும். அப்போது தான் அதிகாரிகளுடன் மக்கள் அன்றாடம் அடையும் துயரங்கள் வெளிச்சத்திற்கு வரும்.
பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை என்பது, முகாமில் அதிகரித்து வரும் மனுக்களை பார்த்தாலே தெரியும். முகாமில் நான்கு ஆண்டுகளாக தீராத பிரச்னை, நான்கு மணி நேரத்தில் தீர்ந்து விட்டதாக, ஒரு பெண்மணி கூறிஇருக்கிறார். இதில் என்ன பெருமை; சிறுமை தான்.
பா.ம.க., பொதுக்குழு கூட்டம், தற்போது ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் மட்டும் நடைபெறுகிறது. பூம்புகாரில் நடைபெறும் மகளிர் மாநாட்டிற்கு அன்புமணி வரலாம். மாநாட்டு பிரசுரத்தில் அவரது படத்தை போடுவோம். வரும் 20ம் தேதி விழுப்புரத்தில் அன்புமணி தலைமையில் நடைபெறும் வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரும் ஆர்ப்பாட்டத்தில், நான் பங்கேற்பது குறித்து விரைவில் சொல்வேன்.
தைலாபுரத்தில் ஒட்டு கேட்கும் கருவியை வைத்தவர்கள், சார்ஜ் செய்தவர்கள், வைக்க சொன்னவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது. இரண்டு நாட்களுக்குள் இதன் முடிவுகள் அம்பலத்துக்கு வரும். ஒட்டு கேட்கும் கருவி குறித்து போலீசார், முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர். சைபர் க்ரைம் போலீஸ் தமிழகத்தில் இருக்கிறதா? சைபர் க்ரைம் போலீசார், சைபராகி; கடைசியில் மைனசாக போய் விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி- மங்களுர் புதிய வாராந்திர ரயில் அறிவிப்பு: கன்னியாகுமரி பயணிகள் ஏமாற்றம்!
சனி 7, மார்ச் 2026 11:34:43 AM (IST)

தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 பேர் கைது!
சனி 7, மார்ச் 2026 8:42:28 AM (IST)

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு
வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது : தூத்துக்குடியில் செல்வப்பெருந்தகை பேட்டி
வெள்ளி 6, மார்ச் 2026 4:12:44 PM (IST)

ஆல் பினிஷ்: சட்டம்- ஒழுங்கு கைமீறி போய் விட்டதா? முதல்வருக்கு ராமதாஸ் கேள்வி!
வெள்ளி 6, மார்ச் 2026 3:49:03 PM (IST)

