» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எல்.ஐ.சி. ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 14, ஜூலை 2025 8:46:24 AM (IST)
அம்பை அருகே எல்.ஐ.சி. ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள முடப்பாலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (63). ஓய்வுபெற்ற எல்.ஐ.சி. ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் ரவிச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அவரது வீட்டுக்குள் ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்த ரவிச்சந்திரன் அறையைவிட்டு வெளியே வந்து பார்த்தபோது அங்கு மர்ம நபர்கள் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி குண்டுகள் வீசியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மொத்தம் 4 குண்டுகளை அவர்கள் வீசியுள்ளனர். அவற்றில் 2 பெட்ரோல் குண்டுகள் வெடித்ததில் வீட்டின் முன்பகுதி மாடி, ஜன்னல்கள் லேசாக சேதமடைந்தது. மேலும் 2 பாட்டிலில் பெட்ரோல் நிரப்பப்பட்டு வெடிக்காத நிலையில் கிடந்தது. இதையடுத்து அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அம்பை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை சூப்பிரண்டு சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்கிைடயே பெட்ரோல் குண்டுகள் வெடித்து சிதறும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அம்பை அருகே ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழைய குற்றாலம் அருகே ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் 2பேர் உயிரிழப்பு!
புதன் 30, ஜூலை 2025 5:36:49 PM (IST)

பெருங்குடி ரயில் நிலையத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது!
புதன் 30, ஜூலை 2025 5:07:58 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலைப் பணிகள்: மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆய்வு
புதன் 30, ஜூலை 2025 4:53:00 PM (IST)

தமிழ்நாட்டில் ஆக.2 முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
புதன் 30, ஜூலை 2025 4:31:20 PM (IST)

ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
புதன் 30, ஜூலை 2025 4:26:59 PM (IST)

மின்கட்டண உயர்வு குறித்து நீலிக் கண்ணீர்: இபிஎஸ் மீது டிஆர்பி ராஜா விமர்சனம்!
புதன் 30, ஜூலை 2025 12:52:02 PM (IST)
