» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு வாலிபர் தற்கொலை முயற்சி: சேலத்தில் பரபரப்பு!
புதன் 16, ஏப்ரல் 2025 12:41:36 PM (IST)
சேலத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன பிரியன் இவர் ஐடிஐ முடித்துவிட்டு தற்போது வேலை தேடி வருகிறார். இவர் சேலம் மாவட்டம் மின்னாம் பள்ளியை சேர்ந்த சூர்யா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகி உள்ளார். இந்த நிலையில் இன்று காலை மாணவி கல்லூரி செல்வதற்காக சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த மோகன பிரியன் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணை குத்தினார். பின்னர் அவரும் தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பயணிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராமில் பழகி வந்த நிலையில் அந்த மாணவி அவரை பிடிக்கவில்லை என்று நிராகரித்ததாகவும் ஆத்திரத்தில் அந்த இளைஞர் கல்லூரி மாணவியை குத்தி தானும் தற்கொலைக்கு முன்றதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுமக்களுக்கு உதவிட சட்டபணிகள் ஆணைய குழு தயார்: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:32:31 PM (IST)

முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் பெண் கைது: 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:36:07 PM (IST)

தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:56:05 PM (IST)

வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:45:53 PM (IST)

தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:24:38 PM (IST)
