» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் பெண் கைது: 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:36:07 PM (IST)

திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருநெல்வேலியை சேர்ந்த முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் ஹுசேன் (61). நிலம் தொடர்பான பிரச்னையால், மார்ச் 18ல் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவ்பிக், மனைவி நுார்னிஷா உள்ளிட்டோரை போலீசார் தேடிவந்தனர். 

இதில் முகமது தவ்பிக் போலீசாரால் சுட்டு கைது செய்யப்பட்டார். ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த நுார்னிஷா, நேற்று தனிப்படையினரால் கைது செய்யப்பட்டு, இரவு நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகமது தவ்பிக், அக்பர் ஷா, பீர்முகமது, கார்த்திக் என்ற அலிஷேக் ஆகியோர் நேற்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory