» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொதுமக்களுக்கு உதவிட சட்டபணிகள் ஆணைய குழு தயார்: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:32:31 PM (IST)

பொது மக்களுக்கு சட்ட ரீதியான உதவிகள் செய்ய தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணையக்குழு தயாராக உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், மாநில சட்டப்பணிகள் ஆணையக் குழுவின் உறுப்பினருமான எம். தண்டபாணி தெரிவித்தார்.
திருநெல்வேலி சட்டக் கல்லூரி கூட்ட அரங்கில் இன்று (18.04.2025) நடைபெற்ற மாபெரும் மரம் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசரும், மாநில சட்டப்பணிகள் ஆணையக் குழுவின் உறுப்பினர் நீதிபதி எம். தண்டபாணி, மாவட்ட முதன்மை நீதிபதி எம்.சாய்சரவணன், மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹதிமனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் ஆகியோர் முன்னிலையில் சட்ட விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், நீதிபதி எம். தண்டபாணி தெரிவித்ததாவது: நாம் அனைவருமே பெரிய தலைமுறையில் இருந்து வந்தவர்கள் அல்ல சாதாரன குடும்பத்தை சார்ந்தவர்கள் தான். மரம் நமக்காக பல நன்மைகளை செய்கிறது. உலக பரிநாம வளர்ச்சியில் முதலில் தோன்றிது மரம். அதற்கு அப்புறம் தான் நாம் தோன்றினோம். நாம் தான்றிய பிறகு நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்சைட்டினை மரம் எடுத்துக்கொண்டு நாம் சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜனை கொடுக்கிறது. இவ்வாறு நமக்கு நன்மையை மரம் தருகிறது.
உள்நாட்டு மரங்கள் நமக்கு அதிகம் நன்மை கிடைக்கிறது. அதிகளவில் உள்நாட்டு மரங்களை நட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டங்களை இயற்றுகிறார்கள். இயற்றிய சட்டங்கள் அதிகாரிகள் வாயிலாக மக்களுக்கு சென்றடைகிறது. இந்த இயற்றப்பட்ட சட்டங்களை அதிகாரிகள் முறையாக மக்களுக்கு கொண்டு செல்கிறார்களா என்று பார்க்க வேண்டியது நீதிமன்றங்களின் பணி.
பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சனை இருக்கும் அவர்களுக்கு உதவி செய்து அவர்களின் பிரச்சனைக்கு வழிகாட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழு மாநிலம், மாவட்டம், தாலுகா அளவில் செயல்பட்டு வருகிறது. சாதாரண மக்களை தேடி சென்று அவர்களுக்கான உரிமைகளை பெற்று தருவது அதற்கான வழிமுறைகளை சொல்லி உதவுவது சட்ட பணிகள் ஆணைய குழுவின் தலையாய கடமையாகும்.
பொதுமக்களாகிய நீங்கள் எந்த நேரமும் சட்டபணிகள் ஆணைய குழுவை அணுகலாம். உங்களுக்கு உதவி செய்ய கடமைப்பட்டுள்ளோம். பொது மக்களுக்கு சட்ட ரீதியான உதவிகள் செய்ய தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணையக்குழு தயாராக உள்ளது என சென்னை உயர் நீதிமன்ற நீதியரசரும், மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினர் உயர்திரு நீதிபதி எம். தண்டபாணி தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், பேசுகையில்: புவி வெப்பமயமாவதால் காலநிலை மாற்றம் ஏற்படுவதன் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு இயற்கை பேரிடர்கள் அதிகரித்து வருகின்றது. புவி வெப்பமடைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது காற்றில் கார்பன்டை ஆக்சைடின் சதவீதம் அதிகரித்து வருவதாகும். கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி கொள்வதற்கும் சூரியனின் வெப்பக் கதிர்வீச்சு பூமியில் நேரடியாக படாமல் இருப்பதற்கும் மரங்கள் அவசியமாகிறது.
மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த நம் முன்னோர்கள் நீர்நிலைகளுக்கு மரங்களின் பெயர்களையும். மருதகுளம், ஆலங்குளம், பனையன்குளம் கடம்பன்குளம் என்றெல்லாம் மரங்களின் பெயர்களையே ஊருக்கும் வைத்துள்ளனர். ஒவ்வொரு கோவிலிலும் தலவிருட்சம் என்ற ஒன்றை வைத்து வழிபட்டு வருகின்றோம். மரங்கள் நமக்கு நிழலை தருகின்றன, கனிகளை தருகின்றன, பறவைகளுக்கும் பல்வேறு பூச்சினங்களுக்கும் வாழ்விடத்தை தருகின்றது. இப்படி அனைத்தையும் தருவதால் மரங்களை தமிழில் தரு என்றும் அழைக்கின்றோம்.
பூமியில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால் இன்று 20 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளன. காடுகள் வளர்ப்பின் முக்கியத்துவம் உணர்த்திட தமிழ்நாடு அரசு புசநநn வுயஅடை யேனர அளைளழைn ரூ உடiஅயவந உhயபெந அளைளழைn ஆகியவற்றை ஏற்படுத்தி மரங்களை வளர்த்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வற்றாத ஜீவநதியான நம் தாமிரபரணி உற்பத்திக்கும் அதன் நீர் வளத்திற்கும் காரணமாக அமைந்திருப்பது மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சோலை காடுகளே ஆகும். காடுகள் இல்லாமல் போனால் வற்றாத ஜீவநீதியும் வற்றிப் போகும். நகர்ப்புற வாழ்விடங்களில் நாள்தோறும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது அதனை தடுக்கும் விதமாக நகர்புற காடுகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாம் ஒவ்வொருவரும் ஒரு மரம் என்ற வீதத்தில் மரங்களை நட்டு பராமரித்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சட்டப் பணிகள் ஆணையக் குழுவின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு சட்டத்தின் தாக்கம் மற்றும் பெண்களின் பாதுகாப்பு, பாலியல் தொடர்பான புகார்கள் போன்ற இன்றைய சூழலில் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்ட விதிமுறைகள் மற்றும் தவறு செய்பவர்கள் மீது சட்டத்தின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை தண்டனைகள் அதன் காரணமாக அவர்களது குடும்பம் பாதிக்கப்படும் நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு தரப்படும்.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அன்பாடும் முன்றில் என்னும் நிகழ்வு இதுவரை 177 பள்ளிகளில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் காவல்துறை அலுவலர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், ஒரு வருவாய் துறை அலுவலர் நேரில் சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களுடன் இந்த சட்டப் பணிகள் ஆணையக்குழு இணைந்து அந்தப் பகுதியில் உள்ள வழக்கறிஞர் இணைத்து செயல்படும் பட்சத்தில் அன்பாடும் முன்றில் நிகழ்விற்கு கூடுதலாக சிறப்பு சேர்க்கும் அதற்கு தேவையான ஒத்துழைப்பும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்தார்.
தொடர்ந்து, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணையக் குழுவின் மூலம் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இன்ற வாகை, நாவல், புங்கன், வேம்பு உள்ளிட்ட பல்வேற வகைகளை சார்ந்த 100 மரக்கன்றுகளை சென்னை உயர் நீதிமன்ற நீதியரசரும், மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினர் உயர்திரு நீதிபதி எம்.தண்டபாணி, மாவட்ட முதன்மை நீதிபதி எம்.சாய்சரவணன், மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், ஆகியோர் முன்னிலையில் நட்டு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நீதியரசர்கள், செயலாளர்/முதுநிலை உரிமையியல் நீதிபதி வி.முரளிதரன், மாவட்ட சமூக வனகாடுகள் வன காவலர் இளங்கோ, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, வட்டாட்சியர்கள் செல்வம், சரவணன், சட்டப்பணிகள் ஆணையக்குழு உறுப்பினர்கள், வழக்கறிஞர் சந்திரசேகர், வழக்கறிஞர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் : ஆட்சியர் தகவல்!
சனி 19, ஏப்ரல் 2025 5:12:02 PM (IST)

என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்ல.. த.வெ.கவின் விர்ச்சுவல் வாரியர்ஸ்: விஜய் பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 4:44:50 PM (IST)

தமிழக மக்களின் அவுட் ஆஃப் கன்ட்ரோல் ஆக ஸ்டாலின் உள்ளார்: தமிழிசை விமர்சனம்!
சனி 19, ஏப்ரல் 2025 4:32:20 PM (IST)

தமிழகத்தில் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
சனி 19, ஏப்ரல் 2025 4:18:14 PM (IST)

மனசாட்சி உள்ள எவரும் விஸ்வகர்மா திட்டத்தை ஏற்க மாட்டார்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சனி 19, ஏப்ரல் 2025 3:45:56 PM (IST)

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 19, ஏப்ரல் 2025 12:52:34 PM (IST)
