» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்ல.. த.வெ.கவின் விர்ச்சுவல் வாரியர்ஸ்: விஜய் பேச்சு

சனி 19, ஏப்ரல் 2025 4:44:50 PM (IST)

"நீங்கள் என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்ல.. த.வெ.கவின் விர்ச்சுவல் வாரியர்ஸ்" என்று த.வெ.க.வின் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோனை கூட்டத்தில் விஜய் பேசினார்.

த.வெ.க.வின் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசிய வீடியோவை வெளியிட்டனர். அந்த வீடியோவில் விஜய் பேசியதாவது: ஐடி விங் நிர்வாகிகள் ஆலோனை கூட்டத்தில் ஜூம் மீட் மூலம் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால், நெட்வொர்க் பிரச்சனையால் அது முடியாமல் போனது. 

அதனால், ரெக்கார்டட் மெசேஜ் அனுப்புகிறேன். இதன்மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நம் சோசியல் மீடியா படை அது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று சொல்கிறார்கள். இது நாம் சொல்வதை விட மற்றவர்கள் பார்த்து தெரிந்துக் கொள்கிறார்கள்.

இனிமேல் நீங்கள் சோசியல் மீடியா ரசிகர்கள் மட்டும் இல்லை. என்னை பொறுத்தவரைக்கும் நீங்கள் அனைவருமே கட்சியின் virtual warriors. அப்படிதான் நான் உங்களை கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நம் ஐடி விங் என்றாலே ஒழுக்கமாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு வேலைப் பாருங்கள். கூடிய விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்... நன்றி...! இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory