» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் : ஆட்சியர் தகவல்!

சனி 19, ஏப்ரல் 2025 5:12:02 PM (IST)

தூத்துக்குடியில் 2025-ம் ஆண்டிற்கான "கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் வருகிற 25ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பாக தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி மற்றும் கையுந்துப்பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய விளையாட்டுக்களில் 2025-ம் ஆண்டிற்கான "கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்” வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரையும் மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் என இருவேளைகளிலும் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. 

ஹாக்கி ஆண்களுக்கு மட்டும் கோவில்பட்டி செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாம் முற்றிலும் இலவசம். நுழைவு கட்டணம் இல்லை. இந்த பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ / மாணவிகள் மற்றும் மாணவரல்லாதோர்கள் கலந்து கொள்ளலாம். 

இப்பயிற்சி முகாமில் பங்கேற்பதற்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி, போன் – 0461 2321149, செல் - 74017 03508 என்ற முகவரியில் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயன் பெறலாம் எனவும், இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து வீரர் / வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் மாவட்டம் ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory