» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை 24-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

வியாழன் 13, மார்ச் 2025 10:45:52 AM (IST)

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை 24-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தன்னை விடுவிக்க கோரி விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா தாக்கல் செய்த மனுவும், கவர்னரின் ஒப்புதல் பெறாமல் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தள்ளுபடி செய்யக்கோரி விஜயபாஸ்கர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இதே கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை நேற்று கோர்ட்டில் வந்தது. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர். இ்தையடுத்து விசாரணையை வருகிற 24-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory