» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசுப் பேருந்துகளுக்கு பாஸ்டேக்கில் தேவையான இருப்பு உள்ளது : பொதுமேலாளர் தகவல்

புதன் 31, டிசம்பர் 2025 4:06:18 PM (IST)

அரசுப் பேருந்துகள் சுங்கசாவடிகளை கடந்து செல்வதற்கு பாஸ்டேக்கில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் பா.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம் நாகர்கோவில் மண்டலத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் நாங்குநேரி சுங்கசாவடிக்கு வந்த போது, பாஸ்டேக்கில் பணம் இல்லாததால் சுங்கசாடியினை கடந்து செல்ல தாமதம் ஏற்பட்டதாக செய்திதாள்களில் வெளியானது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம் நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் பா.பாலசுப்பிரமணியன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்- திருநெல்வேலி மண்டலத்தில் இயங்கும் அனைத்து அரசுப் பேருந்துகளுக்கும் டோல்கேட்டுகளை கடந்து செல்வதற்கு தேவையான முன்பணங்கள் ஏற்கனவே பாஸ்டேக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஒரு சில நேரங்களில் பாஸ்டேக்கில் ஏற்படும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மட்டுமே சுங்கசாவடிகளில் அரசுப் பேருந்துகள் காலதாமதமாக கடந்து செல்கிறது. மேலும் நாகர்கோவில் மண்டலத்திலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் கால தாமதம் ஏற்படாமல், குறித்த நேரத்தில் சுங்க சாவடிகளை கடப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory