» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முத்துநகர் அதிவிரைவு ரயிலின் பயண நேரத்தை குறைக்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!

புதன் 31, டிசம்பர் 2025 5:12:22 PM (IST)



முத்துநகர் அதிவிரைவு ரயிலின் பயண நேரத்தை குறைத்து காலை 7 மணிக்குள் சென்னை எழும்பூரை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலாளர், மா. பிரமநாயகம் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், "வண்டி எண் 12694 தூத்துக்குடி- சென்னை இடையே இயக்கப்படும் முத்துநகர் அதி விரைவு ரயிலை 01-01-2026 முதல் தூத்துக்குடியில் இருந்து இரவு 09-05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 07-35 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும் வகையில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் 30 நிமிடங்களில் பயண நேரத்தைக் குறைத்து அறிவித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

மேலும் இந்த ரயிலை தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காலை 7 மணிக்குள் சென்னை எழும்பூரை சென்றடைய வேண்டும் என்று கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது. வருங்காலங்களில் பயண நேரத்தை குறைத்து காலை 7 மணிக்குள் சென்னை எழும்பூரை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போது வண்டி எண். 12693-12694 முத்து நகர் தூத்துக்குடி-சென்னை, சென்னை- தூத்துக்குடி அதிவிரைவு ரயில் பகிர்தல் இல்லாமல் தனியாக (Sharing) இயக்கப்பட்டு வருகிறது. மேற்காணும் ரயிலில் எப்போதும் காத்திருப்போர் பட்டியல் அனைத்து வகுப்புகளிலும் காணப்படுவதால் முத்து நகர் ரயிலை பகிர்தல் செய்து, தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக, அதிகாலை சென்னை எழும்பூரை சென்றடையும் வகையில் தினசரி மாலையில் நேரடி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சென்னையிலே பிளாட்பாரம் பிரச்சினை இருப்பினும் இந்த ரயிலை ரேணிகுண்டா அல்லது விஜயவாடாவிற்கு நீடித்தால், தென் மாவட்ட பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

வண்டி எண். 15765 தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் விரைவு ரயில் 50 நிமிடங்கள் குறைத்துள்ளமைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த ரயிலுக்கு தூத்துக்குடி மேலூர் நிறுத்தம் வழங்கப்படாமல் உள்ளது. இரு மார்க்கங்களிலும் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் நிறுத்தம் உடனடியாக வழங்க அனுமதி கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 

இந்த ரயில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் பிட்லைன் பணிகள் முடிந்தவுடன் வாரத்திற்கு உடனடியாக மூன்று நாட்கள் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த ரயிலை தினசரி ரயிலாக விரைவாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆதலால் வண்டி எண். 22101-22102 மதுரை- லோக்மான்யா திலக், லோக்மான்யாதிலக்-மதுரை வாராந்திர தூத்துக்குடி வரை நீடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். வண்டி எண். 16236 மைசூர் - தூத்துக்குடி ரயிலை காலை 09:30 மணிக்குள் தூத்துக்குடி சென்றடைய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory