» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பியாக சிலம்பரசன் நியமனம் : காவல்துறை அதிகாரிகள் பதவி உயர்வு!
புதன் 31, டிசம்பர் 2025 8:19:21 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முவதும் 70 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன் பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் பதவி உயர்வு
ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று Armed Force டிஜிபியாக நியமனம்.
ஏடிஜிபி சந்தீப் மிட்டல் பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம் டி.ஜி.பி.,யாக நியமனம்.
ஏடிஜிபி பால நாகதேவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம்.
சிபிசிஐடி ஐஜி அன்பு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமனம்.
ஆவடி கமிஷனர் சங்கர் தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மொடாக் ஆகியோர் மாற்றம்.
தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக நியமனம்.
தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ்வர் தயாள் நியமனம்.
தாம்பரம் காவல் ஆணையராக ஏடிஜிபி அமல்ராஜ் நியமனம்
தமிழகத்தில் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள், 2 கூடுதல் எஸ்பிக்கள் என மொத்தம் 30 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களோடு சேர்த்து மொத்தம் 70 பேருக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி ஐஜியாக இருந்த அன்பு பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாகவும், தெற்கு மண்டல ஐஜியாக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, பதவி உயர்வு பெற்று ஆவடி போலீஸ் கமிஷனராகவும், மும்பை, சிபிஐயில் ஐஜியாக உள்ள தீபக் எம்.தோமர் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று அதே பிரிவிலும், மேற்கு மண்டல ஐஜியாக இருந்த செந்தில்குமார் பதவி உயர்வு பெற்று, டிஜிபி அலுவலக தலைமையிட கூடுதல் டிஜிபியாகவும்,
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த அனிசா உசைன், பதவி உயர்வு பெற்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், காவல்துறை நவீனமயமாக்கல் ஐஜியாக இருந்த நஜ்மல் ஹோடா பதவி உயர்வு பெற்று, கமாண்டோ படை ஏடிஜிபியாகவும்,
தலைமையிட ஐஜியாக இருந்த மகேந்திர குமார் ரத்தோடு, போலீஸ் நலன் ஏடிஜிபியாகவும், ஆவடி போலீஸ் கமிஷனராக இருந்த ஏடிஜிபி சங்கர், சிறைத்துறை ஏடிஜிபியாகவும், போதைப்பொருள் அமலாகப்பிரிவு சிஐடி ஏடிஜிபியாக இருந்த அமல்ராஜ், தாம்பரம் போலீஸ் கமிஷனராகவும், சிறைத்துறை ஏடிஜிபியாக இருந்த மகேஷ்வர் தயாள், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும்,
தாம்பரம் போலீஸ் கமிஷனராக இருந்த அபின்தினேஷ் முடக், போதைப்பொருள் மற்றும் அமலாகப்பிரிவு சிஐடி ஏடிஜிபியாகவும், கமாண்டோ படை ஏடிஜிபியாக இருந்த தினகரன், தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஏடிஜிபியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து துறையில் டிஐஜியாக உள்ள ரம்யா பாரதி, பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் ஐஜியாகவும், மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி பொன்னி, அதே பிரிவில் ஐஜியாகவும், வட சென்னை மாநகர போக்குவரத்து இணை கமிஷனர் சோனல் சந்திரா, குற்ற ஆவணக்காப்பக ஐஜியாகவும், ஒன்றிய அரசில் உளவுத்துறை டிஐஜியாக உள்ள ஜார்ஜி ஜார்ஜ், அதே பிரிவில் ஐஜியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மேலும், சிபிஐ எஸ்பியாக(குஜராத்) இருந்த கலைச்செல்வன், அதே பிரிவிலும் டிஐஜியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை குடியுரிமைப் பிரிவு எஸ்பி அருண் சக்திக்குமார், திருவனந்தபுரம் குடியுரிமைப் பிரிவு எஸ்பி அரவிந்த் மேனன் ஆகியோர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் பணியாற்றுகின்றனர். ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு உளவுத்துறை எஸ்பி செஷாங் சாய், பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் டிஐஜியாகவும், சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு எஸ்பிதேஸ்முக் சேகர் சஞ்சய், பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் டிஐஜியாகவும்,
மத்திய அரசுப் பணியில் உள்ள தீபா கனிங்கர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அதே பிரிவிலும், ராஜஸ்தானில் அயல்பணியாக சென்றுள்ள ஓம் பிரகாஷ் மீனா, டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அதே பிரிவிலும், ஆவடி பட்டாலியன் எஸ்பியாக உள்ள மணிவண்ணன், டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, நெல்லை நகர போலீஸ் கமிஷனராகவும்,
தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்பி அருளரசு, டிஐஜியாக பதவி உயர்வு பெற்று விழுப்புரம் டிஐஜியாகவும், ஆவடி நிர்வாகம் மற்றும் தலைமையிட துணை கமிஷனர் மகேஸ்வரன், சென்னை தலைமையிட இணை கமிஷனராகவும், விழுப்புரம் எஸ்பி சரவணன், திருநெல்வேலி டிஐஜியாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி சாமிநாதன், திண்டுக்கல் டிஐஜியாகவும்,
சென்னை மனித உரிமை ஆணைய எஸ்பி ஜெயலட்சுமி, தாம்பரம் இணை கமிஷனராகவும், சிலை தடுப்புப் பிரிவு எஸ்பி சிவக்குமார், ஆவடி இணை கமிஷனராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம் டிஐஜி மூர்த்தி, சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், காஞ்சிபுரம் டிஐஜி தேவராணி, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், நெல்லை கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, சேலம் சரக டிஐஜியாகவும், அமலாக்கப்பிரிவு ஐஜி கபில்குமார் சரத்கர், தாம்பரம் தலைமையிடம், போக்குவரத்து கூடுதல் கமிஷனராகவும்,
தென் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் கண்ணன், கோவை நகர கமிஷனராகவும், போலீஸ் அகாடமி ஐஜியாக இருந்த தேன்மொழி, போலீஸ் விரிவாக்கப் பிரிவுக்கும், மத்திய மண்டல ஐஜி நிர்மல்குமார் ஜோஷி, சென்னை நகர தலைமையிட கூடுதல் கமிஷனராகவும், நிர்வாகப் பிரிவு ஐஜி பாலகிருஷ்ணன், மத்திய மண்டல ஐஜியாகவும், தாம்பரம் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, டிஜிபி அலுவலக நிர்வாகப் பிரிவு ஐஜியாகவும், சென்னை நிர்வாகப் பிரிவு கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி, தென் மண்டல ஐஜியாகவும்,
காவல்துறை விரிவாக்கப் பிரிவு ஐஜி நரேந்திரன் நாயர், தென் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராகவும், கோவை கமிஷனர் சரவண சுந்தரம், மேற்கு மண்டல ஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் எஸ்பி ஆதர்ஸ் பச்சோரி, சென்னை சைபர் கிரைம் எஸ்பியாகவும், செங்கல்பட்டு எஸ்பி சாய் பிரனீத், விழுப்புரம் எஸ்பியாகவும், நாகப்பட்டினம் எஸ்பி செல்வக்குமார், வடக்கு மண்டல மதுவிலக்கு அமலாக்கத்துறை எஸ்பியாகவும், தாம்பரம் தலைமையிட துணை கமிஷனர் செந்தில்குமார், ஆவடி மத்தியக் குற்றப்பிரிவு துணை கமிஷனராகவும், பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்பி உமையாள், போலீஸ் அகாடமி எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த டாக்டர் டி.செந்தில்குமார், திருச்சி துணை கமிஷனராகவும்,
திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பிரசன்னகுமார், திருநெல்வேலி எஸ்பியாகவும், திருச்சி வடக்கு துணை கமிஷனர் சிபின், செங்கல்பட்டு எஸ்பியாகவும், போலீஸ் நலன் பிரிவு எஸ்பி பாலகிருஷ்ணன், நாகப்பட்டினம் எஸ்பியாகவும், மதுரை மதுவிலக்கு அமலாக்கத்துறை எஸ்பி சந்திர சேகரன், சிலை தடுப்புப் பிரிவு எஸ்பியாகவும், மதுரை நகர துணை கமிஷனர் அனிதா, பெரம்பலூர் எஸ்பியாகவும், கீழ்பாக்கம் துணை கமிஷனர் ஜெரினா பேகம், காவலர் நலன் பிரிவு எஸ்பியாகவும்,
சென்னை மத்தியக் குற்றப்பிரிவு துணை கமிஷனர் கீதா, கீழ்பாக்கம் துணை கமிஷனராகவும், கோவை சிவில் சப்ளை சிஐடி எஸ்பி பாலாஜி சரவணன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு எஸ்பியாகவும், தென்காசி எஸ்பி அரவிந்த், கள்ளக்குறிச்சி எஸ்பியாகவும், அங்கு எஸ்பியாக இருந்த மாதவன், தென்காசி எஸ்பியாகவும், திருநெல்வேலி எஸ்பி சிலம்பரசன், தூத்துக்குடி எஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, தூத்துக்குடி நகர ஏஎஸ்பியாக இருந்த மதன், எஸ்பியாக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர துணை கமிஷனராகவும், அருப்புக்கோட்டை ஏஎஸ்பியாக இருந்து மதிவாணன், எஸ்பியாக பதவி உயர்வு பெற்று மதுரை வடக்கு துணை கமிஷனராகவும்,
தமிழ்நாடு சிறப்பு கமாண்டோ பிரிவு 14வது பட்டாலியன் (பழநி) எஸ்பியாக இருந்த பாண்டியராஜன், தமிழ்நாடு சிறப்பு கமாண்டோ பிரிவு 24வது பட்டாலியனுக்கும் (ஆவடி), சென்னை காவலர் பயிற்சி பள்ளி எஸ்.பியாக இருந்த மகேஸ்வரி, தமிழ்நாடு காமண்டோ பிரிவு எஸ்.பியாகவும், சென்னை அடையார் துணை கமிஷனராக இருந்த பொன் கார்த்திக் குமார், பள்ளிக்கரணை துணை கமிஷனராகவும்,
பள்ளிக்கரணை துணை கமிஷனராக இருந்த கார்த்திகேயன், அடையாறு துணை கமிஷனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் சத்யபிரத சாகு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளராகவும்,
நில நிர்வாகம் ஆணையர் பழனிசாமி, கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராகவும்,
போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் கஜலட்சுமி, நில நிர்வாகம் ஆணையராகவும்,
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கிரண் குராலா, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராகவும்,
அறிவியல் நகரம் துணைத் தலைவர் தேவ் ராஜ் தேவ், தமிழ்நாடு உப்பு நிறுவன முதன்மை செயலாளராகவும்,
வரலாற்று ஆராய்ச்சி, ஆவணக் காப்பக ஆணையர் ஹர் சஹாய் மீனா, அறிவியல் நகர துணைத் தலைவராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நீர்வளத்துறை சிறப்பு செயலாளர் மலர்விழி, வரலாற்று ஆராய்ச்சி மற்றும் ஆவணக்காப்பக ஆணையராகவும்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் கோபால சுந்தர ராஜ், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மற்றும் பயிற்சித்துறைத் தலைவர், இயக்குநராகவும்,
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு துணைச் செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்: அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு
புதன் 31, டிசம்பர் 2025 10:16:12 AM (IST)

நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
புதன் 31, டிசம்பர் 2025 8:09:13 AM (IST)

தமிழகத்தில் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது: தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:57:00 PM (IST)

டெல்லி குடியரசு தின விழா: தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:44:37 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார்: திருமாவளவன் பேச்சு
செவ்வாய் 30, டிசம்பர் 2025 3:53:04 PM (IST)

திமுக தேர்தல் அறிக்கை: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 3:46:50 PM (IST)



.gif)