» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக தேர்தல் அறிக்கை: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 3:46:50 PM (IST)

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மக்களிடம் கருத்து கேட்க, பிரத்யேக மொபைல் செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(டிச. 31) அறிமுகம் செய்கிறார்.
சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. கடந்த டிச. 22 ஆம் தேதி இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுகவின் தேர்தல் அறிக்கை, மக்களின் கோரிக்கைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையாக இருக்கும் என கனிமொழி கூறியுள்ளார்.
இந்த குழுவில் திமுக செய்தித் தொடா்புச் செயலா் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சா்கள் கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆா்.பி.ராஜா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்துகளைக் கேட்டு திமுக தோ்தல் அறிக்கையை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மக்களின் கருத்துகளைக் கேட்பதற்கு திமுக ஒரு மொபைல் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(டிச. 31) இந்த பிரத்யேக செயலியை அறிமுகம் செய்கிறார். மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை, கருத்துகளை இதன்மூலமாக தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது: தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:57:00 PM (IST)

டெல்லி குடியரசு தின விழா: தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:44:37 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார்: திருமாவளவன் பேச்சு
செவ்வாய் 30, டிசம்பர் 2025 3:53:04 PM (IST)

வடமாநில இளைஞரை சிறுவர்கள் தாக்கிய வீடியோ... தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 12:14:42 PM (IST)

சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? - இபிஎஸ்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:19:28 AM (IST)

ஜன.1 முதல் 65 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
செவ்வாய் 30, டிசம்பர் 2025 10:42:26 AM (IST)



.gif)