» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்: அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

புதன் 31, டிசம்பர் 2025 10:16:12 AM (IST)



தூத்துக்குடியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

தூத்துக்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட தலைவர் மீராசா தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் அபூபக்கர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் வரும் 2026 தேர்தலில் இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு திமுக கூட்டணி மீண்டும் அமோகமாக வெற்றி பெற உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது 24 மணி நேரமும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாங்கள் உழைத்துக் கொண்டே இருக்கிறோம். ஆகையால் இன்று தமிழக அனைத்து துறையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. 

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளது. மதசார்பற்ற இந்த கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பது என்ற ஒரே குறிக்கோளுடன் அதிமுக பிஜேபி செயல்பட்டு வருகிறது ஆகையால் நாம் ஒற்றுமையுடன் இருந்து உழைக்க வேண்டும். மீண்டும் திமுக ஆட்சி மலர்ந்திட அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.  கூட்டத்தில் எம்எஸ்எப் ரகுமான், திரேஸ்புரம் மீராசா, மாமன்ற உறுப்பினர் மும்தாஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory