» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இபிஎஸ் பாராட்டு விழாவில் ஜெ., படம் இல்லை : விழாவை புறக்கணித்த செங்கோட்டையன்!

திங்கள் 10, பிப்ரவரி 2025 11:33:29 AM (IST)

அத்திக்கடவு - அவிநாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் விழாவில் பங்கேற்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து ஈரோட்டில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தாவது, அத்திக்கடவு - அவிநாசி திட்டக் குழு ஏற்பாடு செய்திருந்த குழுவைச் சேர்ந்தவர்கள் மூன்று நாள்களுக்கு முன்பு என்னைச் சந்தித்தார்கள். அப்போது அவர்களிடம், எங்களை உருவாக்கிய எம்ஜிஆர், ஜெயலலிதாவின் திருவுருவப் படங்கள் இல்லை. எங்களிடம் கலந்தாலோசித்திருந்தால் நான் அதை உங்கள் கவனித்திற்கு கொண்டு வந்திருப்பேன் என்றேன்.

அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர 2011இல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி அளித்தார். திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் பேனர்கள், அழைப்பிதழ்களில் இல்லை. அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி பிரிவில் நேற்று நடை பெற்றது. எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய இந்த பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காததால் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory