» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஏரல் ஆற்றுப்பாலத்தில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : ஆட்சியர் இளம்பகவத் உத்தரவு
வெள்ளி 14, மார்ச் 2025 8:40:45 AM (IST)

மழைவெள்ளத்தில் சேதமடைந்த ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், ஏரல் தாமிபரணி ஆற்றின் உயர்மட்ட பாலத்தின் வட பகுதியில் இணைப்பு சாலை அரிப்பு ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்தது. இதனால் புதிய உயர்மட்ட பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தற்காலிகமாக அருகில் பழுதாகி கிடந்த தரைமட்ட பாலத்தை சீரமைத்து போக்குவரத்து நடந்து வருகிறது.
சேதமடைந்த புதிய உயர்மட்ட பாலத்தை சீரமைக்க அரசு ரூ.6.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இ்ந்த நிதியில் நெடுஞ்சாலை துறை மூலம் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதில் பாலத்தில் கூடுதலாக 2 தூண்கள் அமைத்து, பாலத்தை நீட்டித்து இணைப்பு சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேற்று காலையில் ஏரல் ஆற்றுப்பாலத்திற்கு சென்று சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, சீரமைப்பு பணிகள் குறித்து நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சின்னச்சாமி, உதவி பொறியாளர் பரமசிவம் மற்றும் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி ஆகியோர் ஆட்சியரிடம் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், இந்த பணிகளை விரைவாக முடித்து போக்குவரத்து தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, ஏரல் தாசில்தார் செல்வகுமார், ஏரல் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் உள்பட பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் நிறுவனத்தில் எந்த தவறுகளும் இல்லை : செந்தில் பாலாஜி விளக்கம்
வெள்ளி 14, மார்ச் 2025 5:22:16 PM (IST)

தாமிரபரணி மேம்பாடு, அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு : முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்பு!
வெள்ளி 14, மார்ச் 2025 12:43:38 PM (IST)

பட்டினமருதூரில் தொல்லியல் அகழாய்வு : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 12:34:58 PM (IST)

வைகை, பல்லவன் ரயில்களில் ஒரு முன்பதிவு பெட்டி பொதுப்பெட்டியாக மாற்றம்
வெள்ளி 14, மார்ச் 2025 12:08:45 PM (IST)

டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் : எடப்பாடி பழனிச்சாமி
வெள்ளி 14, மார்ச் 2025 11:56:12 AM (IST)

இருசக்கர மின் வாகனத்துக்கு ரூ.20 ஆயிரம் மானியம்: தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 10:58:29 AM (IST)

ஓட்டு போட்ட முட்டாள்Mar 14, 2025 - 08:46:42 AM | Posted IP 104.2*****