» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தாமிரபரணி மேம்பாடு, அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு : முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்பு!
வெள்ளி 14, மார்ச் 2025 12:43:38 PM (IST)
தாமிரபரணி மேம்பாடு, பட்டணமருதூர் அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு தொல்லியல் ஆர்வலரும், எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு நன்றி தெரிவித்துள்ளார்.

தொல்லியல் ஆர்வலரும், தாமிரபரணி எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு இது பற்றி கூறும் போது "ஒரு நாட்டின் நாகரீகம் நதிக்கரையில் இருந்து தான் துவங்குகிறது. குறிப்பாக தமிழர் நாகரீகமும் அதுபோலத்தான். குறிப்பாக பொருநை நதிக்கரையில் தான் ஆதிச்சநல்லூர், சிவகளை நாகரீகம் தோன்றியுள்ளது. இன்று தமிழரின் தொன்னை என தமிழக அரசு நிரூபணம் செய்து 5300 வருடம் பழமையானது என நிருப்பிக்க காரணம் சிவகளை நாகரீகம்தான். ஆகவே நதியை காப்பாற்றுவது அரசின் தலையாய கடமையாக உள்ளது.
அந்த வகையில் இந்த அறிவிப்பு எங்களுக்கு சந்தோசத்தினை அளித்துள்ளது.
தமிழக பட்ஜெட்டில் தாமிரபரணி, காவிரி, வைகை போன்ற நதிகளின் கரைகளை மேம்படுத்த ரூ400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இதனால் நதி பாதுகாக்கப்படுவதோடு, பழமை மாறாமல் தொன்மை சின்னங்களான படித்துறை மண்டபங்கள் பாதுகாக்கப்படும். மக்களுக்கு குடிதண்ணீர், விவசாயம், தொழில்சாலைகள் மேம்பட உதவியாக இருக்கும். இதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே வேளையில் நெல்லை மாநராட்சியில் இருந்து தாமிரபரணியில் சாக்கடை கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதோடு, தாமிரபரணியின் எல்லையை அரசு கோப்பில் உள்ளபடி மீட்டெடுத்து கரைகளை மேம்படுத்த நடடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முதல்வர் தமிழரின் நாகரிகத்தினை எழுத வேண்டும்மென்றால் பொருநை ஆற்றின் கரையில் இருந்து தான் எழுத வேண்டும் என்று கூறி வந்தார். இந்நிலையில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வு செய்து அதில் கிடைத்த பொருள்களை, பாளையங்கோட்டை ரெட்டியார் பட்டி மலையில அருங்காட்சியகம் அமைக்கும் பணியை மிகச்சிறப்பாக செய்து முடித்துள்ளார். தற்போது இந்த பட்ஜெட்டில் அகழ்வராய்ச்சிக்கு 7 கோடிரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதில் தூத்துக்குடி மாவட்டம் பட்டினம்மருதூர், தென்காசி மாவட்டம் கரிவலம் வந்த நல்லூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலத்தில் தமிழர்களின்தொன்மையை பறைசாற்ற இந்த ஆய்வு உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கையோடு உள்ளோம்.
40 கோடி செலவில் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் சிந்து வெளி பண்பாட்டு அருங்காட்சியகம் அமைப்பதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். சிந்து சமவெளிநாகரீகம் ஆதிச்சநல்லூருக்கு இணையான நாகரீகம் என நமது ஆய்வாளர்கள் கூறிவரும் நிலையில் எழும்பூரில் அருங்காட்சியகத்தில் சிந்து வெளி பண்பாட்டு அருங்காட்சியகம் அமைப்பது சிறப்பாகும். கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அருங்காட்சியகம் இந்த அரசு அமைத்து தந்தது போலவே எழும்பூர் அருங்காட்சியகம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். என்று அவர் கூறியிருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் நிறுவனத்தில் எந்த தவறுகளும் இல்லை : செந்தில் பாலாஜி விளக்கம்
வெள்ளி 14, மார்ச் 2025 5:22:16 PM (IST)

பட்டினமருதூரில் தொல்லியல் அகழாய்வு : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 12:34:58 PM (IST)

வைகை, பல்லவன் ரயில்களில் ஒரு முன்பதிவு பெட்டி பொதுப்பெட்டியாக மாற்றம்
வெள்ளி 14, மார்ச் 2025 12:08:45 PM (IST)

டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் : எடப்பாடி பழனிச்சாமி
வெள்ளி 14, மார்ச் 2025 11:56:12 AM (IST)

இருசக்கர மின் வாகனத்துக்கு ரூ.20 ஆயிரம் மானியம்: தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 10:58:29 AM (IST)

துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி இளம்பெண்ணை கொன்ற கணவர்: குடும்ப தகராறில் பயங்கரம்!
வெள்ளி 14, மார்ச் 2025 8:46:13 AM (IST)
