» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இருசக்கர மின் வாகனத்துக்கு ரூ.20 ஆயிரம் மானியம்: ‍ தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு

வெள்ளி 14, மார்ச் 2025 10:58:29 AM (IST)



தற்சார்புத் தொழிலாளர்கள் இருசக்கர மின் வாகனம் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக நிதிநிலை அறிக்கையில், இரு சக்கர மின் வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில், 

2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம்!

ரூ.152 கோடியில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள்! அமைக்கப்படும். இதன் மூலம் 1,308 மாணவர்கள் பயன்!

ரூ.100 கோடியில் சென்னை அறிவியல் மையம்!

தமிழர்கள் வசிக்கும் பிற மொழி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படும்.

தலை சிறந்த 500 தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும்!

45 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும்!

நகர்ப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு

கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory