» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உவரி கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
புதன் 5, பிப்ரவரி 2025 11:11:17 AM (IST)
உவரியில் புனித அந்தோணியார் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாளையங்கோட்டை ஆயர் ஜுடு பால்ராஜ் ஏற்றி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் உவரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை 6மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாளையங்கோட்டை மேனாள் ஆயர் ஜுடு பால்ராஜ் மந்திரித்து கொடியேற்றி வைத்தார். கொடியேற்றம் முடிந்ததும் தூத்துக்குடி மறை மாவட்ட பொருளாளர் பிரதீப் மறைவுரை நிகழ்த்தினார்.
கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை நடைபெறுகிறது. பிப்ரவரி 16ம் தேதி 13ம் நாள் திருவிழா அன்று காலை 6.00 மணிக்கு ஆரம்பர திருவிழா கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. இதனை தூத்துக்குடி மறை மாவட்ட மேதகு ஆயர் ஸ்டீபன் நடத்துகிறார்.
இதில், மறை மாவட்ட முதன்மை குரு ரவி பாலன், முதன்மை செயலர் ஜெகதிஷ் முன்னிலை வைக்கின்றனர். காலை 9.00 மணிக்கு கோடி அற்புதர் புனித அந்தோனியார் சப்பர பவனி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருத்தல தந்தையர்கள், நிதி குழுவினர், பணி குழு உறுப்பினர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்துள்ளனர்.