» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தெருவுக்குத் தெரு டாஸ்மாக்கை திறந்து வைத்தால் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும்?: சீமான் கேள்வி

செவ்வாய் 21, ஜனவரி 2025 5:00:58 PM (IST)

தெருவுக்குத் தெரு டாஸ்மாக்கை திறந்து வைத்தால் சட்டம் ஒழுங்கு எப்படி சரியாக இருக்கும்?  என  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் பேசினார்.

விழுப்புரம் அருகேயுள்ள பூரி குடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் கள் விடுதலை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கள் விடுதலை இயக்க தலைவர் நல்லசாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் போன்றோர் கலந்து கொண்டனர். 

அப்போது மாநாட்டு மேடையிலையே கள்ளை சந்தைப்படுத்தும் விதமாக பனை ஓலை பட்டையில் 'கள்' குடித்து சீமான் ஆதரவு தெரிவித்தார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: ஈரோடு தேர்தல் களத்தில் 2 பேர்தான் போட்டி. தேர்தல் களம் எங்களுக்கானது என்றுதான் நாங்கள் நினைப்போம். எந்த களமாக இருந்தாலும் எங்களுடையதாக மாற்றுவதுவதுதான் எங்களது களப்பணி. திமுகவை எதிர்த்து நான் ஒருவன்தானே தனியாக நிற்கிறேன். நீங்கள் இத்தனை அமைச்சர்கள், இத்தனை கட்சிகளை கூட்டணியாக வைத்துக்கொண்டு எதற்கு ஓட்டுக்குப் பணம் கொடுக்கின்றீர்கள்.

பெரியார் என பேசும் பெருமக்கள், பெரியார் பிறந்த மண் என சொல்லும் பெருமக்கள்; ஈரோடு இடைத்தேர்தலில் பெரியாரைப் பேசியதை வைத்து வாக்கு கேளுங்களேன். சீமான் பெரியாரை விமர்சித்துவிட்டார் அவருக்கு வாக்களிக்காதீர்கள் என ஒருமுறை பேசுங்களேன். இப்போது பெரியாரைச் சொல்லி வாக்கு வாங்கப்போகிறீர்களா?. காந்தி படத்தினைக் காட்டி வாக்கு வாங்கப்போகிறீர்களா?. எங்கே உன் கோட்பாடு?. எங்கே உன் கொள்கை?. கொள்கை வழிநின்று ஆட்சி செய்பவர்களுக்கு கோடிகளைக் கொட்டி வாக்கைப் பறிக்க வேண்டிய தேவை ஏன் வருகிறது.

கள்ளுக் கடைகளை திறந்தால் டாஸ்மாக் விற்பனை படுத்துவிடும்; கள் என்ற பெயர்தான் பிரச்சினை எனில், அதை பனம்பால் மூலிகைச் சாறு என பெயர் வைக்கலாம். தெருவுக்குத் தெரு டாஸ்மாக்கை திறந்து வைத்தால் சட்டம் ஒழுங்கு எப்படி சரியாக இருக்கும்?. ஒரே நாளில் 100 வழக்குகளை வாங்கியவன்; வடிவேலு சொல்லுவதுபோல் சிறைப்பறவை நான். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory