» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனிம வளக் கொள்ளையை தடுக்க தீவிர நடவடிக்கை : டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்!

திங்கள் 20, ஜனவரி 2025 5:46:14 PM (IST)

கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,"புதுக்கோட்டை அருகே கனிமவளக் கொள்ளை குறித்து புகார் அளித்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றி படுகொலை – இயற்கை வளங்களோடு, சமூக ஆர்வலர்களையும் பாதுகாக்கத் தவறிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெபகர் அலி, பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

திருமயம் பகுதியில் உள்ள மலைகளை உடைத்து இயற்கை வளங்களை கொள்ளையடித்துச் செல்லும் சமூக விரோதிகள் மீது வட்டாட்சியர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்ததோடு நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தி வந்த ஜெபகர் அலி கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, அது தொடர்பாக புகார் அளிக்கும் இயற்கை ஆர்வலர்களையும் பாதுகாக்கத் தவறியதே ஜெபகர் அலி கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, சமூக ஆர்வலர் ஜெபகர் அலி கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory