» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனல்மின் நிலையத்திற்கு கடல் வழியாக நிலக்கரி கொண்டு வரும் திட்டத்தை கைவிட கோரிக்கை!!

திங்கள் 20, ஜனவரி 2025 12:24:04 PM (IST)



திருச்செந்தூர் கடல் அரிப்பு எதிரொலியாக உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு கடல் வழியாக நிலக்கரி கொண்டு வரும் திட்டத்தை கைவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலாளர் முரசு தமிழப்பன் மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையும் அமலி நகர் மீனவர் கிராமம் கடற்கரையும் சில மாதங்களாக கடல் அரிப்பினால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாதிப்பு அதிகரிக்க கூடும் என்கிற கவலையும் பயமும் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் இந்த கடல் அரிப்பு என்பது உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள கடற்கரை கிராமத்தில் கடலின் கரையில் இருந்து கடலுக்குள் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் சிமெண்ட் கான்கிரீட் பாலம் அமைத்து ஆழமான கடல் பகுதியில் நிலக்கரியை ஏற்றி வருகிற கப்பல் வரக்கூடிய அளவிற்கு ஆழமான கடல் பகுதியில் நிலக்கரி இறக்குதளம் பல லட்சம் டன் எடை கொண்ட கரும்பறைகளைக் கொண்டு பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. 

நிலக்கரி இறக்குமதி துறைமுகம் அமைக்கும்பணி தற்போது முழுமை பெற்று வரும் நிலையில் சிமெண்ட் கான்கிரீட் மூலமாக உருவாக்கப்பட்டு இருக்கிற தடுப்பு பெரிய அளவிலான கட்டிகளை கொண்டு நிலக்கரி இறக்குமதி துறைமுகத்தில் கடலுக்குள் தடுப்பு அமைக்கப்பட்டு வரும் நிலையில் திருச்செந்தூர் கோவில் கடற்கரை பெரிய அளவில் கடல் நீர் அரிப்பிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்துவதற்கு கூட கரைகளே இல்லாத அளவிற்கு கடல் அரிப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் இருக்கக்கூடிய அய்யாவழி திருக்கோவிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உடன்குடி அனல் நிலையத்திற்கு நிலக்கரியை கடல் வழியாக கொண்டு வரக்கூடிய இந்த திட்டத்திற்கு திருச்செந்தூர் தாலுகா மீனவர் மக்களிடத்திலும் முருகன் கோவில் பக்தர்களிடத்திலும் கடல் அரிப்பு பாதிப்பின் காரணமாக எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் இந்தத் திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்தக் கடல் அரிப்பினால் மீனவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித் தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு கடல் வழியாக நிலக்கரி கொண்டு வரும் திட்டத்தை கைவிட்டு தூத்துக்குடியில் இருந்து ரயில் மூலமாக உடன்குடிக்கு நிலக்கரி கொண்டு வரும் திட்டத்தை தொடங்க வேண்டும். கடலுக்குள் அமைக்கப்பட்டிருக்கிற கான்கிரீட் பாலத்தையும் நிலக்கரி இறக்குமதிக்கான துறைமுகத்தையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory