» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை நீதிமன்றம் அருகே நடந்த கொலை வழக்கு: 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 21, ஜனவரி 2025 12:52:42 PM (IST)
நெல்லையில் நீதிமன்ற வளாகம் முன் நடந்த கொலை வழக்கில் கைதான 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் கீழ்நத்தம் மேலூரைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவர் தம் மீதான வழக்கு ஒன்றில் விசாரணைக்காக ஆஜராக கடந்தாண்டு டிசம்பர் 20ம் தேதி நீதிமன்றம் வந்திருந்தார். நீதிமன்றம் வெளியே உள்ள டீக்கடை ஒன்றில் நண்பர் ஒருவருடன் டீ குடித்துக் கொண்டு இருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படுகொலை சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந் நிலையில் கைது செய்யப்பட்ட 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார்.