» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை: கனிமொழி

சனி 4, ஜனவரி 2025 4:23:41 PM (IST)

யார் அந்த சார்? என்பது குறித்து காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கிறது. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என முதல்வர் தெரிவித்திருக்கிறார். அதன்படியே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை. யார் அந்த சார்? என்பது குறித்து காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கிறது. 

அப்படி ஒருவர் இல்லாமலும் இருக்கலாம். காவல் துறை தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க இதில் போராடுவதற்கு என்ன இருக்கிறது? இனி நீதிமன்றத்தில் வழக்கு சரியாக நடக்க வேண்டும், அது கண்காணிக்கப்பட வேண்டும். முதல் தகவல் அறிக்கை வெளியானது தவறு. பாஜக அரசியல் தலைவர்களே அவர்களது எக்ஸ் தளத்தில் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டார்கள். 

அது மிகவும் தவறான ஒன்று. எப்ஐஆர் வெளியாவதற்கு தமிழ்நாடு அரசு காரணம் அல்ல.தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று தேசிய தகவல் மையமே தெரிவித்துவிட்டது. எதிர்க்கட்சிகள் இதனை அரசியலாக்கவே விரும்புகின்றனர்' என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory