» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வீராங்கனை திடீா் மரணம்: போலீசார் தீவிர விசாரணை!

செவ்வாய் 19, நவம்பர் 2024 10:22:20 AM (IST)

ரயிலில் பயணித்தபோது சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட கோவையை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீராங்கனை திடீரென இறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி செய்கின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கோயம்புத்தூர் சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராபின் டென்னிஸ். இவரது மகள் எலினா லாரெட் (15). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். மேலும், கூடைப்பந்து வீராங்கனையாகவும் இருந்து வந்தார்.

பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரெட், சக மாணவிகளுடன் ரயிலில் குவாலியர் சென்றார். போட்டியை முடித்து விட்டு சனிக்கிழமை கிராண்ட் டிரங்க் விரைவு ரயிலில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, மாணவி எலினா லாரெட் சக மாணவிகளுடன் சேர்ந்து ரயிலில் சிக்கன் ரைஸ், பர்க்கர் ஆகியவை வாங்கி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இது தொடர்பாக எலினா லாரெட் சென்னை அண்ணா நகரில் உள்ள உறவினர் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளார்.

அவர், ரயில் சென்னை வந்ததும் எலினா லாரெட்டை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். சிகிச்சைக்கு பின்னர் எலினா லாரெட், பெரவள்@ரில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டுக்குச் சென்றார்.

போலீசார் விசாரணை: அங்கு சென்ற சிறிது நேரத்தில் எலினா லாரெட்டுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதில் அவர், அங்கேயே மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு பெரவள்ளூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், எலினா லாரெட் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

பெரவள்ளூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவி சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உயிரிழந்தாரா அல்லது அவருடைய இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory