» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

வியாழன் 21, நவம்பர் 2024 8:29:58 AM (IST)

சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்சி. (நர்சிங்) தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

இவர்களுக்கான நேர்காணல் அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை கொச்சியில் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை வேலையளிப்பவரால் வழங்கப்படும். இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

சுய விவர விண்ணப்ப படிவம், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட், அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 2-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். படிப்பு மற்றும் பணி விவரங்களின் தகுதியை பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory